இனி எப்போ வேணும்னாலும் வாங்கலாம்: 6 ஜிபி ரேம், ரூ.10,999முதல்! போக்கோ எம் 2 ஸ்மார்ட்போன்!

|

போக்கோ நிறுவனத்தின் புதிய மாடலான போக்கோ எம்2 ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 30 ஆம் தேதி (இன்று) மதியம் 12 மணிமுதல் பிளிப்கார்ட் மூலமாக ஓபன் சேல் தொடங்க உள்ளது.

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்போனுக்கான ஃப்ளாஷ் விற்பனை பல கட்டமாக நடைபெற்றது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஓபன் சேல் அறிவிப்பு

ஓபன் சேல் அறிவிப்பு

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஓபன் சேல் அறிவிப்புக்கு அதன் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 30 ஆம் தேதி இன்றுமுதல் பிளிப்கார்ட் வழியாக இன்றுமதியம் 12 மணிமுதல் பிளிப்கார்ட் மூலமாக ஓபன்சேல் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம், சிறந்த திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹிலீயோ ஜி80 பிராசஸர் வசதி

மீடியாடெக் ஹிலீயோ ஜி80 பிராசஸர் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹிலீயோ ஜி80 பிராசஸர் வசதியுடன் ஏஆர்எம் மாலி-ஜி52 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன்: பார்சலில் வந்த துணிதுவைக்கும் சோப்- உஷார்!

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ்

பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் +5எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வருகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனா ப்ரிக் ரெட், பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் ப்ளூ போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.10,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி ரூ.12,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Poco M2 Smartphone Open Sale Announced in India From Today: Here the Price and Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X