குறிப்பிட்ட சலுகையுடன் இன்று விற்பனைக்கு வரும் போக்கோ எம்2.!

|

மிகவும் எதிர்பார்த்த போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஆனது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த அட்டகாச ஸ்மார்ட்போன் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி
கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். பின்பு நோ காஸ்ட் இஎம்ஐ வசதி கூட அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச்

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல்
திர்மானம், சிறந்த திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராசஸர் வசதியுடன்

இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹிலீயோ ஜி80 பிராசஸர் வசதியுடன் ஏஆர்எம் மாலி-ஜி52 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அதிர்ச்சி தகவல்: மோடி, கருணாநிதி என 10,000 ஆளுமைகளை உளவு பார்த்த சீனா: அம்பலமான உண்மை!அதிர்ச்சி தகவல்: மோடி, கருணாநிதி என 10,000 ஆளுமைகளை உளவு பார்த்த சீனா: அம்பலமான உண்மை!

ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும்

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட்போனின் பின்புறம்

இந்த போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் +5எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட்பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆப்பிள் வாட்ச்-க்கு பதில் கற்களை அனுப்பிய பிளிப்கார்ட்: ஆத்திரமடைந்த பிரபல இசையமைப்பாளர்!ஆப்பிள் வாட்ச்-க்கு பதில் கற்களை அனுப்பிய பிளிப்கார்ட்: ஆத்திரமடைந்த பிரபல இசையமைப்பாளர்!

 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி மெமரி கொண்ட

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Poco M2 Sale Starts Today in India Price Offers and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X