அறிமுகமாகி விற்பனைக்கே வந்த ரீலோடட் சாதனம்: போக்கோ எம்2 ரீலோடட் விலை இவ்வளவுதான்!

|

போக்கோ எம்2 ரீலோடட் 4ஜிபி ரேம் மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்புகளுடன் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.

போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்கள்

போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்கள்

போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு சிறந்த அம்சங்களுடன் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. அதன்படி போக்கோ எம்2 ரீலோடட் 4ஜிபி ரேம் மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்புகளுடன் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

போக்கோ எம்2 ரீலோடட்

போக்கோ எம்2 ரீலோடட்

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வைத் தவிர்க்க முடிவு செய்தது. அதற்கு மாறாக டுவிட் மூலமாகவே சாதனத்தின் வெளியீடு நடைபெற்றது. டுவிட் மூலமான வெளியீடு குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் விலை, விற்பனை, விவரங்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு டுவிட்களை வெளியிட்டது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. அதேபோல் போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்2 சாதனத்தின் அம்சங்களை போலவே இருக்கிறது. இருப்பினும் இதன் ரேம் பவர் மற்றும் குறைக்கப்பட்டு 4ஜிபி ரேம் திறன் உடன் வருகிறது.

போக்கோ எம்2 ரீலோடட் விலை

போக்கோ எம்2 ரீலோடட் விலை

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மீண்டும் கிடைக்கும் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். இந்த போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.9,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை ரேம் வேரியண்ட்டில் மட்டுமே வருகிறது. அதேபோல் போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என இரண்டு கட்டமைப்புகளில் வருகிறது.

போக்கோ எம்2 ரீலோடட் கிடைக்கும் வண்ண விருப்பங்கள்

போக்கோ எம்2 ரீலோடட் கிடைக்கும் வண்ண விருப்பங்கள்

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் மூலமாக ஏப்ரல் 21 அதாவது அறிமுகம் செய்த இதேநாளில் 3மணி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது துவக்க சலுகையாக பிளிப்கார்ட்டில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும்போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதேபோல் பேங்க் ஆஃப் பரோடா மாஸ்டர் கார்ட், டெபிட் கார்ட்களை முதல் தடவை பரிவர்த்தனை செய்யும் பயனர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் நோ காஸ்ட் இஎம்ஐ ஆக ரூ.1584 என்ற இஎம்ஐ பரிவர்த்தனைகளில் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்ட் 10 ஆதரவு

ஆண்ட்ராய்ட் 10 ஆதரவு

போக்கோ எம்2 ரீலோடட் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம், போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது குறைக்கப்பட்ட ரேம் திறனைத் தவிர பிற அம்சங்கள் அனைத்தும் போக்கோ எம்2 சாதனத்தை போன்றே இருக்கிறது.

போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்ட் 10-ஐ அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம் (நானோ) ஆதரவுடனும் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ,080x2,340 பிக்சல்கள் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 4ஜிபி ரேம் உடன் இது வருகிறது. அதேபோல் இதில் 64ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் 512ஜிபி மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

அதேபோல் கேமரா அமைப்புகளும் போக்கோ எம்2 போன்றே இருக்கிறது. இந்த போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. முன்புற கேமரா குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா சாதனத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்திற்கு இந்த ஸ்மார்ட்போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது. போக்கோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இதில் வைஃபை 802.11 ஏசி, வோல்ட்இ ஆதரவு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Poco M2 Reloaded Smartphone Launched in India With 4GB RAM, 5000 mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X