Home
Mobile

சத்தமில்லாமல் போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த உடனே போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000 வரை விலையை குறைத்துள்ளது. மேலும் இதன் முழுவிவரங்களையும் பார்ப்போம்.

 64ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ மாடலின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம்அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

போன் ஆனது 6.67-

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

 மிகவும் எதிர்பார்த்த

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜிஎஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில்

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்மார்ட்போனின் பின்புறம்

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாதனத்தில் 5020எம்ஏஎச்

போக்கோ எம்2 ப்ரோ சாதனத்தில் 5020எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை 802.11, புளூடூத் வி 5.0,

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

News Source: themobileindian.com

Best Mobiles in India

English summary
Poco M2 Pro Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X