Poco M2, Poco M2 Pro, Poco X3, Poco C3 போன்கள் மீது அதிரடி விலை குறைப்பு.. இனி புதிய விலை இதுதான்..
போக்கோ நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் ஸ்மார்ட்போன்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. போக்கோ நிறுவனத்தின் அறிவிப்புப்படி போக்கோ எம் 2, போக்கோ எம் 2 ப்ரோ, போக்கோ எக்ஸ் 3 மற்றும் போகோ சி 3 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலையை நிறுவனம் தற்பொழுது குறைத்துள்ளது. புதிய விலை நிர்ணயம் இப்போது பிளிப்கார்ட்டில் பிரதிபலிக்கிறது. புதிய விலை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எம் 2
போகோ எம் 2 ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் 6 ஜிபி + 64 ஜிபி மாடலான போனிற்கு ரூ.1,000 விலை குறைக்கப்பட்டு இப்போது ரூ. 9,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டின் மீது ரூ .1,500 விலை குறைப்பு கிடைத்துள்ளது. இப்போது இதன் விலை ரூ .10,999 என்று மாறியுள்ளது, இதன் அசல் விலை இதற்கு முன்பு ரூ .12,499 இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ சி 3
போக்கோ சி 3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்ட் மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் மாடல்களுக்கு ரூ. 500 விலை குறைப்பை நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, போக்கோ சி 3 ஸ்மார்ட்போனின், 3 ஜிபி + 32 ஜிபி மாடல் இப்போது ரூ .7,499 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல், விலை குறைப்பிற்குப் பின்னர் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் இப்போது ரூ .8,499 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும்.

போக்கோ எம் 2 ப்ரோ
போகோ எம் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 1,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 12,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதன் அசல் விலை முதலில் ரூ. 13,999-ல் இருந்தது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ. 13,999 மற்றும் ரூ. 15,999 என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதன் விலை முறையே ரூ .14,999 மற்றும் ரூ .16,999 ஆகும்.

போக்கோ எக்ஸ் 3
போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மீது நிறுவனம் ரூ. 500 விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு ரூ. 17,999 என்ற புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 18,499 என்ற அசல் விலையில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications