Home
Mobile

ரூ.13,999 மட்டுமே: போகோ எம் 2 ப்ரோ அடுத்த விற்பனை இன்று- மிஸ் பண்ணாதிங்க!

போகோ நிறுவனத்தின் புதிய பிராண்ட் மாடலான போகோ எம் 2 ப்ரோ விற்பனை ஆகஸ்ட் 18 ஆம் தேதி இன்று மதியம் 12 மணிக்கு நடக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போகோ எம் 2 ப்ரோ

போகோ எம் 2 ப்ரோ

போகோவின் மூன்றாவது ஸ்மார்ட்போனான போகோ எம் 2 ப்ரோ சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இரண்டு ஃபிளாஷ் விற்பனையை நடைபெற்ற நிலையில் இந்த சாதனத்தின் அடுத்த விற்பனை ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

போகோவின் இரண்டாவது ஸ்மார்ட்போன்

போகோவின் இரண்டாவது ஸ்மார்ட்போன்

சியோமியின் துணை பிராண்டான போகோ இரண்டாவது ஸ்மார்ட்போன் எம் 2 ப்ரோ ஆகும். ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனையாக இன்று ஆகஸ்ட் 18 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக நடைபெறும். இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மூலம் வாங்கலாம். இது அவுட் ஆஃப் தி ப்ளூ, க்ரீன் மற்றும் க்ரீனர் மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

6.67-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளே

6.67-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளே

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜிஎஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

48எம்பி பிரைமரி சென்சார் கேமரா

48எம்பி பிரைமரி சென்சார் கேமரா

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5020எம்ஏஎச் பேட்டரி

5020எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்2 ப்ரோ சாதனத்தில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

போக்கோ எம்2 ப்ரோ விலை அம்சங்கள்

போக்கோ எம்2 ப்ரோ விலை அம்சங்கள்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Poco M2 Pro Next Sale Date in India on today Price and Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X