Home
Mobile

இந்தியாவில் போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று இந்த போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2340 x 1080 பிக்சல் திர்மானம்

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம், சிறந்த திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலீயோ ஜி80 பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹிலீயோ ஜி80 பிராசஸர் வசதியுடன் ஏஆர்எம் மாலி-ஜி52 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எம்2 ஸ்மார்ட்போனின் பின்புறம்

இந்த போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் +5எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது

போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர்

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Poco M2 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X