Home
Mobile

போட்டுத்தாக்கு... பல மிட்-ரேன்ஜ் போன்களை தூக்கி அடிக்கும் விலை, அம்சங்கள்.. POCO-வின் புதிய போன்!

மிட்-ரேன்ஜ் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை (Mid-range Smartphone) வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், வருகிற மே 9 ஆம் தேதி வரையிலாக காத்திருப்பது நல்லது. ஏனென்றால், மேற்குறிப்பிட்ட தேதியில் போக்கோவின் புதிய எஃப்-சீரீஸ் (POCO F-Series) ஸ்மார்ட்போன் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது!

நாம் இங்கே பேசுவது போக்கோ எஃப்5 (Poco F5) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இன்னும் 2 வாரங்களில் (சரியாக மே 9, மாலை 5.30 மணிக்கு) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்கிற விவரங்கள் இதோ:

பல மிட்-ரேன்ஜ் போன்களை தூக்கி அடிக்கும் விலையில் POCO-வின் புதிய போன்!

அறிமுக தேதியை அறிவித்த கையோடு போக்கோ இந்தியா (POCO India) நிறுவனமானது போக்கோ எஃப்5-யின் ரியர் கேமரா (Rear Camera) செட்டப்பை வெளிப்படுத்தும் ஒரு டீஸர் வீடியோ (Teaser Video) ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன் வழியாக இது எல்இடி ஃபிளாஷ் (LED Flash) உடனான ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை (Triple Rear Camera Unit) பேக் செய்யும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் போக்கோ எஃப்5 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 ப்ராசஸர் (Snapdragon 7+ Gen 2 SoC) மூலம் இயக்கப்படும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. போக்கோவின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 12 டர்போவின் (Redmi Note 12 Turbo) ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, போக்கோ எஃப்5 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ 14 (MIUI 14) உடன் இயங்கலாம். மேலும் இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை (120Hz Refresh Rate) ஆதரிக்கும் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம்.

கேமராக்களை பொறுத்தவரை (முன்னரே குறிப்பிட்டபடி) இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். அதில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் சென்சார் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் இடம்பெறலாம்.

ஸ்டோரேஜை பொறுத்தவரை, மேலும் இது 8ஜிபி மற்றும் 12ஜிபி என்கிற 2 ரேம் ஆப்ஷன்களிலும், 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம். கடைசியாக இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support) உடனான பெரிய 5000எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டிருக்கலாம்.

போக்கோ எஃப்5 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ரார் (@heyitsyogesh) வழியாக கிடைத்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை நிர்ணயமானது ரூ.28,000 - ரூ.29,000 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் அமரும்.

இந்த விலை நிர்ணயம் உண்மையாகும் பட்சத்தில், ரூ.30,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பல நிறுவனங்களின் போன்களுக்கு மட்டுமின்றி,. கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) போன்ற மாடல்களுக்கும் போக்கோ எஃப்5 கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco India Confirmed Its New 2023 Midrange Phone Poco F5 India Launch on May 9 Check Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X