Home
Mobile

POCO போட்ட போடு.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 8050mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?

போகோ பிரியர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டித் தூக்கும்படி போகோ எப்9 அல்ட்ரா (POCO F9 Ultra) பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. 8050mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த போகோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

முன்னதாக வெளியான போகோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.72,000 பட்ஜெட்டில் இருந்தது. சீன மார்கெட்டில் கடந்த நவம்பர் மாதம் வெளியாகியது. ஆகவே, இந்த நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் போகோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.

POCO போட்ட போடு.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 8050mAh பேட்டரி!

போகோ எப்9 அல்ட்ரா அம்சங்கள் (POCO F9 Ultra Specifications): 6.85 இன்ச் (2608 x 1200 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. கியூஎச்டி (QHD) ரெசொலூஷன் மற்றும் 185Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை இந்த போகோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுக்க உள்ளது.

16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொடுக்கப்பட உள்ளது. 8050mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டு உள்ளது. மெயின் கேமராவுக்கு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது.

டெலிபோட்டோ கேமராவில் 5x இன்-சென்சார் ஜூமிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை இந்த போகோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட மடாலாக கிடைக்க இருக்கிறது. பிரீமியம் டியூரபிலிட்டி கொடுக்கும்படி IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) கிடைக்கிறது.

பிளாக் (Black), ஒயிட் (White), கிரீன் (Green) மற்றும் ரெட் (Red) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,00,000 பட்ஜெட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே, இது அல்ட்ரா பிரீமியம் மாடலாக இருக்கப் போகிறது.

முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டதால், விரைவில் எதிர்பார்க்கலாம். சீன மார்கெட்டுக்கு பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. போகோ எப்8 அல்ட்பா ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டது.

அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 6.9 இன்ச் (2608 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் கொடுக்கப்படுகிறது. 50 எம்பி + 50 எம்பி + 50 எம்பி கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 6500mAh பேட்டரி, 100W சார்ஜிங் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
POCO F9 Ultra With 8050mAh Battery 100W Fast Charging Specifications Leaked Before Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X