Home
Mobile

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங், 8050mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. புது POCO போன்.. எந்த மாடல்?

போகோ நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களான போகோ எப்7 ப்ரோ (POCO F9 Pro) மற்றும் போகோ எப்9 அல்ட்ரா (POCO F9 Ultra) ஸ்மார்ட்போன்களின் குளோபல் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பேட்டரி, கேமரா, சிப்செட்டில் பிரீமியம் காட்ட இருக்கின்றன. இதில் போகோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதியன்று இந்த போகோ எப்7 சீரிஸ் வெளியாக இருக்கிறது. இதில் போகோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இதுவரையில் வெளியான எப் சீரிஸ் மாடல்களிலேயே டாப்-லெவல் பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. டிசைன், கலர் மற்றும் வெளியீட்டு தேதியை போகோ நிறுவனமே உறுதி செய்து இருக்கிறது.

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங், 8050mAh பேட்டரி.. மாடல்?

போகோ எப்9 அல்ட்ரா அம்சங்கள் (POCO F9 Ultra Specifications): டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்ட மாடலாக இந்த போகோ எப்9 அல்ட்ரா வெளியாக இருக்கிறது. டார்க் செர்ரி (Dark Cherry) கலரில் கிளாஸ் பேக் பேனல் கிடைக்கிறது. பிளாட் டிஸ்பிளே டிசைனை கொடுக்க இருக்கிறது. போஸ் நிறுவனத்தின் டியூனிங்குடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

இந்த டிசைன், கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவையாகும். மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) / எக்ஸ்ட்ரீம் எடிஷன் (Extreme Edition) கிடைக்க இருக்கிறது. பிரீமியம் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது.

200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் டெலிபோட்டோவில் 5எக்ஸ் சென்சார் ஜூமிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த போகோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.

6.9 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. 185Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. பேட்டரி செட்டப்பானது கேமிங் பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. 8050mAh பேட்டரி மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

ஆகவே, பேட்டரிக்கான தெர்மல் புரொடெக்சன் மற்றும் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) எதிர்பார்க்கலாம். பிரீமியம் மாடலாக இருப்பதால் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. ஆகவே, வரும் நாட்களில் அதிகராப்பூர்மாக தெரியவரும்.

இந்த போகோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், போகோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.65,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.70,000 முதல் ரூ.80,000 வரையில் இருக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதியில் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
POCO F9 Ultra With 200MP Camera 8050mAh Battery To Launch on September 1 For Global Market
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X