அடிச்சான் பாரு போக்கோ.. 8050mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. புது 5ஜி போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எப்9 அல்ட்ரா (POCO F9 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இப்போது போக்கோ எப்9 அல்ட்ரா போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.
போக்கோ எப்9 அல்ட்ரா அம்சங்கள் (Poco F9 Ultra Specifications): 6.9-இன்ச் 1.5கே 12-பிட் AMOLED டிஸ்பிளே உடன் போக்கோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2510 x 1156 பிக்சல்ஸ், 185 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (185Hz Refresh Rate), 4,800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் (Instant Touch Sampling Rate), டிசி டிம்மிங், 4500 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm)சிப்செட் உடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு, விஷன்பூஸ்ட் டி8 சிப்செட் ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் போக்கோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
OIS ஆதரவு கொண்ட 200எம்பி S5KHP5 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி 5எக்ஸ் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது போக்கோ எப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ரியர் கேமராக்கள் மூலம் 8கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
செல்பிளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமரா மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.
3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன. அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), போஸ் ட்யூனிங் (Bose tuning) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளும் இந்த போக்கோ எப்9 அல்ட்ரா போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
8050எம்ஏஎச் பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்ஸ் சார்ஜிங், 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதிகளுடன் புதிய போக்கோ எப்9 அல்ட்ரா போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 ஏடி, புளூடூத் 6.0, கலிலியோ (Galileo), GLONASS (குளோனாஸ்) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

போக்கோ எப்9 அல்ட்ரா விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எப்9 அல்ட்ரா மாடலின் விலை USD 799 (இந்திய மதிப்பில் ரூ.75,845)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட போக்கோ எப்9 அல்ட்ரா மாடலின் விலை USD 949 (இந்திய மதிப்பில் ரூ.90,080)-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட போக்கோ எப்9 அல்ட்ரா மாடலின் விலை USD 1199 (இந்திய மதிப்பில் ரூ.1,13,810)-ஆக உள்ளது.
குறிப்பாக இந்த போன் தேர்ந்தெடுக்கப்பட்ட உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளாக் மற்றும் டார்க் செர்ரி கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications