POCO அடிச்சான் பாரு.. 6330mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OIS கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் போகோ பிரியர்கள் வெயிட்டிங் மோடில் இருக்கும்படியான பீச்சர்களுடன் போகோ எப்9 ப்ரோ (POCO F9 Pro) இருக்கிறது. இப்போது, குளோபல் வெளியீட்டு தேதி உறுதியாகி இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த போகோ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி, பீச்சர்கள் மற்றும் டிசைன் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வருகிற செப்டம்பர் 1ஆம் தேதியன்று குளோபல் மார்கெட்டில் இந்த போகோ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. அரோரா கிரீன் (Aurora Green) கலரில் விற்பனைக்கு வெளியாக இருக்கிறது. போஸ் டியூன்டு சவுண்ட் சிஸ்டம் (Bose Tuned Sound System) கொடுக்கப்பட இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.

இருப்பினும், மார்கெட்டில் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் விவரங்கள் கசிந்துவிட்டன. இது போகோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. பேட்டரி, சிப்செட் மற்றும் டிசைனில் அப்கிரேட்களை பார்க்க முடிகிறது. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
போகோ எப்9 ப்ரோ அம்சங்கள் (POCO F9 Pro Specifications): 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 185Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது.
மேலும், 50 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 6330mAh பேட்டரி மற்றும் 100W ஹைப்பர்சார்ஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. அலுமினியம் ஃபிரேம் கிடைக்கிறது. விலைக்கு முன்பு போகோ எப்8 ப்ரோவை பார்க்கலாம்.
முன்னதாக வெளியான இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16 OS) கிடைக்கிறது. 4 OS அப்டேட்கள், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைத்தன.
இதை போகோ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கலாம். 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வேடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இது போகோ எப்9 ப்ரோ மாடலை போலவே இருக்கிறது. ஆனால், செல்பீ கேமராவில் எப்8 ப்ரோ 20 மெகாபிக்சலை மட்டுமே கொடுத்தது. எப்9 ப்ரோ மாடலில் 32 எம்பி செல்பீ கிடைக்க இருக்கிறது.
6210mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளது. குளோபல் மார்கெட்டில் போகோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.52,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, போகோ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.60,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications