Home
Mobile

7000mAh பேட்டரி உடன் புது POCO 5ஜி போன்.. விலை இவ்ளோ கம்மியா.. அடிச்சு புடிச்சு வாங்குவாங்களே!

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில் இங்கே ஒரு யுத்தமே நடந்து கொண்டிருக்க, போக்கோ நிறுவனமானது சைலன்ட் ஆக "அதே சிப்செட்" கொண்ட தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதுவும் ஒப்பீட்டளவில் மற்ற மாடல்களை விட மலிவான விலைக்கு!

அது போக்கோ எப்8 அல்ட்ரா (Poco F8 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும். சமீபத்தில் இது என்பிடிசி (NBTC) வலைத்தளத்தில் 25102PCBEG என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்டுள்ளது. இது - இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகம் மிகவும் நெருக்கத்தில் இருப்பதை குறிக்கிறது.

7000mAh பேட்டரி உடன் புது POCO 5ஜி போன்!

போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் 15, ஐக்யூ 15, ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களில் உள்ள அதே சிப்செட். இந்த மூன்று ஸ்மார்ட்போன்களுமே இந்த மாதம் (நவம்பர் 2025) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால் போக்கோ எப்8 அல்ட்ரா மேற்கண்ட மற்ற 3 மாடல்களை காட்டிலும் மலிவான விலைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இது ரூ.56,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.59,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ மாடலை விட மலிவாக உள்ளது.

அதே போல ரூ. 65,000 - ரூ.75,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வருமென எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15 மற்றும் ரூ.64,999 க்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஐக்யூ 15 மாடலை விடவும் போக்கோ எப்8 அல்ட்ரா மலிவானதாக இருக்கலாம். ஆக ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் மலிவான மாடல் ஆக இந்திய சந்தையில் நிலைநிறுத்தப்படலாம்.

போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 7,000mAh பேட்டரி, மூன்று 50-மெகாபிக்சல் சென்சார்களை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் ஐபி69 ரேட்டிங் ஆகியவைகளுடன் வரலாம்.

இது சீனாவில் ரெட்மி கே90 சீரீஸின் கீழ் அறிமுகமான ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் (Redmi K90 Pro Max) மாடலின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ரெட்மி கே90 மாடல் ஆனது இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் போக்கோ எப்8 ப்ரோ (POCO F8 Pro) மாடலாக அறிமுகம் செய்யப்படலாம்

போக்கோ எப்8 சீரீஸ்-ல் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இரண்டு மாடல்களும் 2கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவற்றை ஆதரிக்கும் ஓஎல்இடி பேனல்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மாடலில் ஒரு ஸ்டாண்டர்ட் டூயல்-ஸ்பீக்கர் அமைப்பை எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் அல்ட்ரா மாடலில் மேம்பட்ட சவுண்ட் அவுட்புட்டிற்காக கூடுதல் ரியர் ஸ்பீக்கருடன் 2.1 ஆடியோ சிஸ்டத்தை எதிர்பார்க்கலாம். இரண்டுமே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3 உடன் அனுப்பப்படலாம். சிப்செட்டை பொறுத்தவரை எப்8 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் பேக் செய்யப்படலாம். அதே நேரத்தில் அல்ட்ரா மாடல் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்டு இயங்கலாம்.

இரண்டு மாடல்களும் 16ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.1 ஸ்டோரேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். அல்ட்ரா மாடலில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம்.

பின்புறத்தில் எப்8 ப்ரோ மாடலானது 50 மெகாபிக்சல் (ஆம்னிவிஷன் லைட் பியூஷன் 800, ஓஐஎஸ்) ப்ரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸ் மற்றும் 50 மெகாபிக்சல் (2.5 எக்ஸ் டெலிஃபோட்டோ, ஓஐஎஸ்) கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகையில் உள்ள போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் (ஆம்னிவிஷன் லைட் பியூஷன் 950, ஓஐஎஸ்) ப்ரைமரி கேமரா மற்றும் ஓஐஎஸ் ஆதரவுடன் 3.5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உட்பட இரண்டு கூடுதல் 50-மெகாபிக்சல் லென்ஸ்களை கொண்டிருக்கலாம். கடைசியாக இரண்டு போன்களும் IP68 / IP69 ரேட்டிங்கை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F8 Ultra With Snapdragon 8 Elite Gen 5 Chipset 7000mAh battery Launching Soon in India Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X