சாம்சங் எல்லாம் ஒரம்போ.. 7000mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 100W சார்ஜிங்.. வருகிறது Poco போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எப்8 அல்ட்ரா (Poco F8 Ultra) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் போக்கோ எப்8 அல்ட்ரா சில விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
போக்கோ எப்8 அல்ட்ரா அம்சங்கள் (Poco F8 Ultra Specifications): 2கே எல்டிபிஒ அமோலெட் டிஸ்பிளே (2K LTPO AMOLED display) உடன் போக்கோ எப்8 அல்ட்ரா வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட, 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 Chipset) உடன் போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். ஆகவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு 16(Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக் கொண்டு இந்த போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய போக்கோ போனில் உள்ளன. அதேபோல் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
7000mAh பேட்டரி உடன் போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளன. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.
அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








