Home
Mobile

கண்களை கவரும் டிசைன்.. 6500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புது Poco போன்.. எந்த மாடல்?

வரும் நவம்பர் 26-ம் தேதி உலக சந்தையில் போக்கோ எப்8 ப்ரோ மற்றும் போக்கோ எப்8 அல்ட்ரா (Poco F8 Ultra) ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் இந்த போன் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும். இந்நிலையில் போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் படங்களை தற்போது வெளியிட்டுள்ளது போக்கோ நிறுவனம்.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே90 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தான் உலக சந்தை மற்றும் இந்தியாவில் போக்கோ எப்8 ப்ரோ மற்றும் போக்கோ எப்8 அல்ட்ரா பெயர்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போக்கோ எப்8 அல்ட்ரா போனில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள், பன்ச் ஹோல் டிஸ்பிளே, போஸ் ட்யூனிங் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள் உள்ளன. இப்போது போக்கோ எப்8 அல்ட்ரா போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

கண்களை கவரும் டிசைன்.. வருகிறது புது Poco போன்.. எந்த மாடல்?

போக்கோ எப்8 அல்ட்ரா அம்சங்கள் (Poco F8 Ultra Specifications): 6.9-இன்ச் 2கே எல்டிபிஒ அமோலெட் டிஸ்பிளே (2K LTPO AMOLED display) உடன் போக்கோ எப்8 அல்ட்ரா வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 Chipset) உடன் போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். ஆகவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி + 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய போக்கோ போனில் உள்ளன. அதேபோல் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), போஸ் ட்யூனிங் செய்யப்பட்ட 2.1ch ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன.

கண்களை கவரும் டிசைன்.. வருகிறது புது Poco போன்.. எந்த மாடல்?

அதுவும் 6500mAh பேட்டரி உடன் போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளன. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 220 கிராம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F8 Ultra images and key specifications leaked ahead of November 26 launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X