பட்டைய கிளப்பும் POCO.. 6500mAh பேட்டரி, OmniVision கேமரா, IP69 உடன் புது போன்.. எந்த மாடல்?
ஒருவழியாக போக்கோ நிறுவனமானது உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையின் தற்போதைய டிரெண்ட் ஆன "பிக் பேட்டரி ஸ்மார்ட்போனிற்குள்" (Big Battery Smartphone) அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனம் முறையே 6210mAh மற்றும் 6500mAh பேட்டரியுடன் வரும் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
அவைகள் - போக்கோ எப்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த சீரிஸின் கீழ் போக்கோ எப்8 ப்ரோ (Poco F8 Pro) மற்றும் போக்கோ எப்8 அல்ட்ரா (Poco F8 Ultra) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும். இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே - நேற்று சீனாவில் அறிமுகமான ரெட்மி கே90 சீரீஸின் உலகளாவிய ரீபிராண்டட் வெர்ஷன்கள் ஆகும்.

அதாவது சீனாவில் ரெட்மி கே90 சீரீஸின் கீழ் அறிமுகமான ரெட்மி கே90 (Redmi K90) மற்றும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் (Redmi K90 Pro Max) ஆகிய மாடல்கள் இந்தியா மற்றும் இதர உலகளாவிய சந்தைகளில் போக்கோ எப்8 மற்றும் போக்கோ எப்8 ப்ரோ என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும்.
இது ரெட்மி மற்றும் போக்கோ நிறுவனங்களுக்கு புதிதல்ல. நினைவூட்டும் வண்ணம் போக்கோ எப்7 ப்ரோ (Poco F7 Pro) மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா (Poco F7 Ultra) ஆகிய 2 மாடல்களும் சீனாவில் அறிமுகமான ரெட்மி கே80 (Redmi K80) மற்றும் ரெட்மி கே80 ப்ரோ (Redmi K80 Pro) மாடல்களின் ரீபிராண்டட் வெர்ஷன்கள் ஆகும்.
போக்கோ எப்8 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களின் வெளியீடு - எதிர்பார்த்ததை விட விரைவில் நிகழக்கூடும் என்றும் கூறப்படுகிறது. போக்கோ எப்8 அல்ட்ரா ஏற்கனவே ஒரு முக்கியமான சான்றிதழை பெற்றுவிட்டது. இது போக்கோ எப்8 சீரீஸின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதை குறிக்கிறது.
இதற்கிடையில் டிப்ஸ்டர் காக்பர் ஸ்க்ர்சிபெக், எக்ஸ் தளம் வழியாக, போக்கோ எப்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி விவரங்களை லீக் செய்துள்ளார். அதன் மூலம் க்ளோபல் வேரியண்ட்கள் ஆனது அவற்றின் சீன வேரியண்ட்களுடன் ஒப்பிடும்போது சிறிய பேட்டரிகளை கொண்டிருக்கும்.
ஹைப்பர்ஓஎஸ் குறியீட்டை ஆராய்ந்த பிறகு போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6210mAh பேட்டரியுடன் வரும் என்றும், போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6500mAh பேட்டரியுடன் வரும் என்றும் ஸ்க்ர்சிபெக் தெரிவித்து உள்ளார். ஒப்பிடுகையில் ரெட்மி கே90 ஆனது 7100mAh யூனிட்டை கொண்டுள்ளது மற்றும் ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஆனது இன்னும் பெரிய 7500mAh பேட்டரியை பேக் செய்கிறது.
ஒப்பீட்டளவில் குறைக்கப்பட்ட பேட்டரி திறன்களை கொண்டிருக்கும் என்றாலும் கூட, மீதமுள்ள அம்சங்கள் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.59-இன்ச் டிஸ்பிளே, போக்கோ எப்8 அல்ட்ரா மாடலில் சற்றே பெரிய 6.9-இன்ச் டிஸ்பிளே போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்.
வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இரண்டு மாடல்களும் 2கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவற்றை ஆதரிக்கும் ஓஎல்இடி பேனல்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரோ மாடலில் ஒரு ஸ்டாண்டர்ட் டூயல்-ஸ்பீக்கர் அமைப்பை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் அல்ட்ரா மாடலில் மேம்பட்ட சவுண்ட் அவுட்புட்டிற்காக கூடுதல் ரியர் ஸ்பீக்கருடன் 2.1 ஆடியோ சிஸ்டத்தை எதிர்பார்க்கலாம். இரண்டுமே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3 உடன் அனுப்பப்படலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை எப்8 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் பேக் செய்யப்படலாம். அதே நேரத்தில் அல்ட்ரா மாடல் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்டு இயங்கலாம். இரண்டு மாடல்களும் 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 ஸ்டோரேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராவை பொறுத்தவரை போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். அல்ட்ரா மாடலில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். பின்புறத்தில் எப்8 ப்ரோ மாடலானது 50-மெகாபிக்சல் (ஆம்னிவிஷன் லைட் பியூஷன் 800, ஓஐஎஸ்) ப்ரைமரி கேமரா + 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் (2.5x டெலிஃபோட்டோ, ஓஐஎஸ்) கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுகையில் உள்ள போக்கோ எப்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 50-மெகாபிக்சல் (ஆம்னிவிஷன் லைட் பியூஷன் 950, ஓஐஎஸ்) ப்ரைமரி கேமரா மற்றும் ஓஐஎஸ் ஆதரவுடன் 3.5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உட்பட இரண்டு கூடுதல் 50-மெகாபிக்சல் லென்ஸ்களை கொண்டிருக்கலாம். கடைசியாக இரண்டு போன்களும் IP68 / IP69 ரேட்டிங்கை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








