இப்பவே எதிர்பார்ப்பு எகிறிடுச்சு.. OLED டிஸ்பிளே.. 12ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புது POCO போன் ரெடி..
போக்கோ (poco) நிறுவனம் தனது புதிய போக்கோ எப்8 ப்ரோ (Poco F8 Pro) ஸ்மார்டபோனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
போக்கோ எப்8 ப்ரோ அம்சங்கள் (Poco F8 Pro Specifications): 6.59-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

தரமான ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) உடன் இந்த அசத்தலான போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 58எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இதில் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளன.
6500mAh பேட்டரி அல்லது 7100mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய போக்கோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போக்கோ போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








