Home
Mobile

இது வந்தா போதும்.. மத்த எல்லாமே அப்புறம்தான்.. 7100mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. BOSE டியூனிங்.. எந்த மாடல்?

போகோ (POCO) நிறுவனத்தின் அடுத்த மாடலான போகோ எப்8 ப்ரோ (POCO F8 Pro) ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் கசிந்துள்ளது. ரெட்மி கே90 (REDMI K90) ஸ்மார்ட்போனில் கிடைத்த போஸ் சவுண்ட் டியூனிங் இதிலும் கிடைக்க இருப்பது இந்த பாக்ஸ் மூலமாக தெரியவந்துள்ளது. போகோ நிறுவனம் முதல்முறையாக மிகப்பெரும் ஆடியோ பிராண்ட்டுடன் கைகோர்த்துள்ளது தெரிகிறது. இந்த போகோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போகோ எப்8 சீரிஸ் மாடல்கள் விரைவில் குளோபல் மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் போகோ எப்8 ப்ரோ மட்டுமல்லாமல், போகோ எப்8 அல்ட்ரா (POCO F8 Ultra) ஸ்மார்ட்போனும் கிடைக்க இருக்கிறது. அதேபோல போகோ பேட் எக்ஸ்1 மாடலும் கூடவே களமிறங்க இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது வந்தா போதும்.. மத்த எல்லாமே அப்புறம்தான்.. 7100mAh பேட்டரி!

ஏற்கனவே, ரெட்மி கே90 ஸ்மார்ட்போனின் குளோபல் வெர்ஷனாக இந்த போகோ எப்8 ப்ரோ இருக்கப் போவதாக தகவல்கள் கசிந்தன. இப்போது, அதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும்படி அபிஷேக் யாதவ் மூலமாக கசிந்த ரீடெயில் பாக்ஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ரெட்மி கே90 ஸ்மார்ட்போனில் போஸ் ஆடியோ டியூனிங் கொடுக்கப்பட்டது.

அதேபோல இந்த போகோ எப்8 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் போஸ் ஆடியோ டியூனிங் கிடைக்க இருப்பது ரீடெயில் பாக்ஸ் குறிப்பிடுகிறது. மேலும், அந்த பாக்ஸில் சார்ஜர் கொடுக்கப்படவில்லை. எல்லோ மற்றும் பிளாக் டிசைனில் கிடைக்க இருப்பதும் தெரிகிறது. இந்த விவரங்களை தவிர மற்றவை குறித்த தகவல்கள் தெரியவரவில்லை.

இருப்பினும், ரெட்மி கே90 ஸ்மார்ட்போனின் ரீபிராண்ட் வெர்ஷனாக இந்த போகோ எப்8 ப்ரோ மாடல் இருக்கும்பட்சத்தில் அதில் கிடைக்க இருக்கும் பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை தெரிந்து கொள்வது முக்கியமானது. ஆகவே, இப்போது, ரெட்மி கே90 ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்ட பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் (2510 x 1156 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கிடைக்கிறது. அட்ரினே 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

மேலும், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது. லைட் பியூஷன் சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கிடைக்கிறது. இதில் 2.5X ஆப்டிகல் ஜூமிங் கொடுக்கப்படுகிறது.

20 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 7100mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. போஸ் ஆடியோ டியூனிங் மட்டுமல்லமாமல், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன.

7100mAh பேட்டரி கிடைக்க இருப்பதால், 8 எம்எம் தடிமன் மற்றும் 206 கிராம் எடை வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இது சீன மார்கெட்டின் விலையாகும். குளோபல் மார்கெட்டில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஓரிரு வாரங்களில் அதிகாப்பூர்வ அறிவிப்பு வரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO F8 Pro Retail Box Leaked With Sound by Bose Ahead Of Launch Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X