Home
Mobile

போட்டான் பாரு POCO.. பக்கா பட்ஜெட்டில் புது போன்.. 6210mAh பேட்டரி, 100W சார்ஜிங், IP69, Bose ஸ்பீக்கர்!

போக்கோ (POCO) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆக போக்கோ எஃப்8 சீரிஸ் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி அன்று உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த சீரிஸின் கீழ் போக்கோ எஃப்8 ப்ரோ மற்றும் போக்கோ எஃப்8 அல்ட்ரா என்கிற 2 மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், போக்கோ எஃப்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பெரும்பாலான முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளன. அதாவது போக்கோ எஃப்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிப்செட், பேட்டரி திறன், டிஸ்பிளே அளவு மற்றும் கேமரா குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

போட்டான் பாரு POCO.. பக்கா பட்ஜெட்டில் புது போன்.. 6210mAh பேட்டரி!

லீக் ஆன விவரங்களின்படி போக்கோ எஃப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.59-இன்ச் பிளாட் அமோஎல்இடி எல்டிபிஸ் (6.59-inch flat AMOLED LTPS display) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எஃப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite SoC) உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் (LPDDR5X RAM) மற்றும் யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் (UFS 4.0 Storage) உடன் இணைக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எஃப்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50எம்பி ப்ரைமரி ரியர் சென்சார், 2.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 8எம்பிஅல்ட்ராவைடு கேமரா ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கலாம். முன்பக்கத்தில் செல்பீக்களுக்கான 20எம்பி கேமரா பேக் செய்யப்படலாம்.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 6,210mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இது 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஐபி69 ரேட்டிங், ஒரு மெட்டல் ஃபிரேம் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

இது ஆண்ட்ராய்டு 16-அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 உடன் அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக 199 கிராம் எடையுள்ளதாகவும் இருக்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி போக்கோ எஃப்8 தொடர் நவம்பர் 26 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் நிகழ்வில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் போக்கோ எஃப்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பெரும்பாலும் ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.37,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கு அறிமுகமானது.

போக்கோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்
- கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களைள்
- ஏஐ நோட்ஸ், ஏஐ இன்டர்ப்ரெட்டர், ஏஐ இமேஜ் என்ஹான்ஸ்மென்ட், ஏஐ இமேஜ் எக்ஸ்பான்ஷன் மற்றும் பல ஏஐ டூல்ஸ்

- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டருடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சார்
- 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 3டி ஐஸ்லூப் சிஸ்டம் மற்றும் வெப்பச் சிதறலுக்கான 6,000 மிமீ சதுர வேப்பர் கூலிங் சேம்பர்
- வைல்ட்பூஸ்ட் ஆப்டிமைசேஷன் 3.0
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 7550mAh பேட்டரியை
- IP66 + IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
- 222 கிராம் எடை

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO F8 Pro Major Specifications Leaked Global Launch on November 26 What Will Be India Price Range
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X