Home
Mobile

மொத்த மார்கெட் காலி.. 100W சார்ஜிங்.. 6210mAh பேட்டரி.. OIS கேமரா.. BOSE ஆடியோ.. எந்த மாடல்?

போகோ நிறுவனத்தின் மிட்-ரேஞ்ட் மாடல்களான போகோ எப்8 ப்ரோ (POCO F8 Pro) மற்றும் போகோ எப்8 அல்ட்ரா (POCO F8 Ultra) ஆகியவை குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டன. போஸ் ஆடியோ டியூனிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட், ஹைப்பர்ஓஎஸ போன்ற பீச்சர்களில் மிரளவிடுகின்றன. இந்த மாடல்களின் விவரங்கள் இதோ.

இந்தோனேசியாவில் இருக்கும் பாலியில் இந்த போகோ எப்8 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே சீனாவில் வெளியான ரெட்மி கே90 சீரிஸ் மாடல்களின் குளோபல் வெர்ஷன்களாக இது கிட்டத்தட்ட இருக்கின்றன. இந்த வெர்ஷன்களே இந்திய மார்கெட்டிலும் வெளியாக இருப்பதால், அவற்றின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

மொத்த மார்கெட் காலி.. 100W சார்ஜிங்.. 6210mAh பேட்டரி.. OIS கேமரா!

போகோ எப்8 ப்ரோ அம்சங்கள் (POCO F8 Pro Specifications): இந்த போகோ ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (HyperOS 3) கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் மற்றும் ஈஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. போஸ் ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கிறது.

மொத்த மார்கெட் காலி.. 100W சார்ஜிங்.. 6210mAh பேட்டரி.. OIS கேமரா!

100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6210mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 8 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொடுக்கிறது. 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் கொடுக்கிறது. இந்த போகோ எப்8 ப்ரோ போனில் வை-பை 7 மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி கொடுக்கிறது.

போகோ எப்8 அல்ட்ரா அம்சங்கள் (POCO F8 Ultra Specifications): இந்த அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதிலும் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 480Hz டச் சாம்பிளிங் ரேட், டால்பி விஷன் மற்றும் எச்டிஆர்1பிளஸ் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் எலைட் 8 ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Elite Gen 5 SoC) கிடைக்கிறது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 கிடைக்கிறது. போஸ் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற முந்தைய மாடலில் கிடைத்த ஆடியோ பீச்சர்கள் கொடுக்கப்படுகின்றன. அதேபோல ஃபிங்கர்பிரிண்ட், இன்பிராரெட் சென்சார்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 6500mAh பேட்டரி உள்ளது.

மொத்த மார்கெட் காலி.. 100W சார்ஜிங்.. 6210mAh பேட்டரி.. OIS கேமரா!

100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. இந்த அல்ட்ரா மாடலில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. 50 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இப்போது விலைகளை பார்ப்போம்.

போகோ எப்8 ப்ரோ விலை (POCO F8 Pro Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,676ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.56,139ஆக இருக்கிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) கலர்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகைகள் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

மொத்த மார்கெட் காலி.. 100W சார்ஜிங்.. 6210mAh பேட்டரி.. OIS கேமரா!

போகோ எப்8 அல்ட்ரா விலை (POCO F8 Ultra Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.65,066ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.71,314ஆகவும் இருக்கிறது. பிளாக் (Black) மற்றும் டெனிம் ப்ளூ (Denim Blue) கலர்களில் கிடைக்க இருக்கிறது. இது அமெரிக்கா டாலர்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விலையாகும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X