7550mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 24GB ரேம்.. 3D ஐஸ்லூப்.. ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே பாத்து மிரளுது.. எந்த போன்?
இந்திய மார்கெட்டில் முதல்முறையாக 7550mAh பேட்டரி கொண்ட மாடலாக போகோ எப்7 (POCO F7) களமிறங்க இருக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 24 ஜிபி ரேம், 3டி ஐஸ்லூப் சிஸ்டம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரளவிடுகிறது. இந்த போகோவின் பட்ஜெட் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. இதனால், அதிக பேட்டரி கேபாசிட்டி விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். இந்த பட்ஜெட் விவரம் மற்றும் பீச்சர் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜூன் 24ஆம் தேதி இந்த போகோ எப்7 மாடலானது, குளோபல் மார்கெட் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. முன்னதாக சிப்செட், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ரேம் போன்ற பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டன. அதேபோல பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டருக்கு கிடைக்க இருப்பதும் உறுதியாகியது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இதில் லேட்டஸ்ட் அப்டேட்டில் ரூ.35,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் அதிக கேபாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போனாக இது கிடைக்க இருக்கிறது. அதேபோல சிப்செட்டும் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க இருக்கிறது.
போகோ எப்7 அம்சங்கள் (POCO F7 Specifications): இந்த போகோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்க இருக்கிறது. 7550mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது.
பெரிய பேட்டரி கிடைப்பதால், கூலிங் மற்றும் ஹீட் கன்ட்ரோல் கொடுக்க 3டி ஐஸ்லூப் சிஸ்டம் (3D IceLoop System) கிடைக்கிறது. இதுபோக ஏஐ டெம்ப்ரேச்சர் கன்ட்ரோல் (AI Temperature Control) கிடைக்கிறது. 24 மணி நேரங்களுக்கு யூடியூப் வீடியோ பிளேபேக், 2 வாரங்களுக்கு ஸ்டான்ட்-பை பேக்கப், 2.5 நாட்களுக்கு நான்-ஸ்டாப் வாய்ஸ் கால்கள் பேக்கப் பெறலாம்.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. பிளாக், ஒயிட் மற்றும் லிமிடெட் எடிஷனில் கிரே & பிளாக் டோன் கொண்ட மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன.
மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஸ் 2 (Xiaomi HyperOS 2) மற்றும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்க இருக்கிறது. 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 சென்சார் வர இருக்கிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 20 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கிடைக்க இருக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், கட்டாயம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்க இருக்கிறது. ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ப்ரூப் வர இருக்கிறது. 6.83 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications