வெச்சி செஞ்சிட்டாங்க.. 120W சார்ஜிங்.. 5300mAh சார்ஜிங்.. 16GB ரேம்.. 50MP கேமரா.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?
விஷன் பூஸ்ட் டி7 சிப்செட், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 5300mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், 50 எம்பி டெலிபோட்டோ கேமரா போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் போக்கோ எப்7 அல்ட்ரா (POCO F7 Ultra) குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. வைல்டு பூஸ்ட் ஆப்டிமைசேஷன் (WildBoost Optimization), கேம் எச்டிஆர் (Game HDR), 12FPS ஸ்மார்ட் ஃபிரேம் போன்ற பிரத்யேக பீச்சர்களை கொடுக்கும் இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போனின் விவரங்கள் இதோ.
போக்கோ எப்7 அல்ட்ரா அம்சங்கள் (POCO F7 Ultra Specifications): இந்த போக்கோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட் மட்டுமல்லாமல், கிராபிக்ஸ் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க விஷன் பூஸ்ட் டி7 (VisionBoost D7) சிப்செட் வருகிறது.

இந்த சிப்செட் மூலம் கேமிங் விளையாடும்போது 2K சூப்பர் ரெசொலூஷன் + 120 எப்பிஎஸ் ஸ்மார்ட் ஃபிரேம் ரேட் + கேம் எச்டிஆர் ஆகியவை என்ஹான்ஸ் செய்யப்படும். இதன் மூலம் அல்ட்ரா கிளியர் கேமிங் கிராபிக்ஸ் எதிர்பார்க்கலாம். இதுபோக அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2.0 (Xiaomi HyperOS 2.0) உள்ளது.
இந்த ஹைப்பர்ஓஎஸ் மூலம் சியோமி ஹைப்பர்ஏஐ (Xiaomi HyperAI) சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ சினிமாடிக் லாக் ஸ்கிரீன், ஏஐ டைனாமிக் வால்பேப்பர், ஏஐ சர்ச்ச், ஏஐ ஆர்ட், ஏஐ ரைட்டிங், ஏஐ சப்டைட்டில், ஏஐ இன்டர்பிரிட்டர் போன்ற பல்வேறு பீச்சர்கள் கிடைக்கின்றன. WQHD+ ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (3200 x 1440 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது.
இந்த கலர் ப்ரோ (Colour PRO) டிஸ்பிளேவில் போக்கோ ஷீல்டு கிளாஸ் (POCO Shield Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 526 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. கேம் டர்போ மோட் (Game Turbo Mode) சப்போர்ட் உள்ளது.
இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் களமிறங்கி இருக்கின்றன. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் லைட் ஃப்யூஷன் 800 சென்சார் (Light Fusion 800 Sensor) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
சாம்சங் எஸ்5கேகேடி1 (Samsung S5KKD1) சென்சார் கொண்ட 32 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சாம்சங் எஸ்5கேஜேஎன்5 (Samsung S5KJN5) சென்சார் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த போக்கோவில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது.
120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5300mAh பேட்டரி வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.55,690ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,980ஆக இருக்கிறது. எல்லோ மற்றும் பிளாக் கலர்களில் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








