Home
Mobile

இந்திய மார்கெட் அதிருது.. 5300mAh பேட்டரி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

ப்ளோவ் அமோலெட் டிஸ்பிளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5300mAh பேட்டரி, ஓஐஎஸ் மெயின் கேமரா மட்டுமல்லாமல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டுடன் குளோபல் மார்கெட்டில் வெளியான போக்கோ எப்7 அல்ட்ரா (POCO F7 Ultra) போனுக்கு இந்தியாவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. இருப்பினும், இந்த பிரீமியம் போன் இங்கு வெளியாகுமா? என்னும் சந்தேகம் இருந்தது. ஆனால், போக்கோ இந்தியாவின் சிஇஓ அதை உறுதி செய்து போக்கோ பிரியர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறார்.

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் அல்லது மிட்-ரேஞ்ச் மாடல்களை மட்டுமே போக்கோ நிறுவனம் களமிறக்கி வருகிறது. இதில் பட்ஜெட் மாடல்கள் அதிகமாக வெளியாகி இருக்கின்றன. ஆகவே, பிரீமியம் மாடல்கள் எப்போது வெளியாகும் என்று போக்கோ பிரியர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், சீனா மற்றும் குளோபல் மார்கெட்டில் பிரீமியம் மாடல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய மார்கெட் அதிருது.. 5300mAh பேட்டரி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்!

இப்படித்தான் கடந்த மாதமும் போக்கோ எப்7 சீரிஸ் (POCO F7 Series) மாடல்கள் குளோபல் மார்கெட்டில் வெளியாகின. இதில் போக்கோ எப்7 அல்ட்ரா போனின் பீச்சர்கள் இந்தியாவில் இருக்கும் போக்கோ பிரியர்களை வெகுவாக கவர்ந்தது. இது பிரீமியம் மாடலாக இருப்பதால், இங்கு வெளியாகுமா என்று சந்தேகமும் இருந்தது. ஆனால், இந்த முறை மிஸ் ஆகாது என்று சொல்லலாம்.

ஏனென்றால், போக்கோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஹிமான்ஷு டான்டண், அவரது எக்ஸ் தளத்தில் போக்கோ எப்7 அல்ட்ராவின் போட்டோவை பகிர்ந்து, க்நாக் க்நாக் (Knock Knock) என்று ட்வீட் செய்துள்ளார். ஆகவே, இந்திய மார்கெட்டில் போக்கோ எப்7 அல்ட்ரா வெளியாவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் போக்கோ எப்7 (POCO F7) மற்றும் போக்கோ எப்7 ப்ரோ (POCO F7 Pro) மாடல்களும் வெளியாக வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாட்களில் இதுவும் தெரிந்துவிடும். போக்கோ எப்7 அல்ட்ரா போனானது ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டதால், இந்த போனின் பீச்சர்கள் மற்றும் விலை எப்படி என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய மார்கெட் அதிருது.. 5300mAh பேட்டரி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்!

போக்கோ எப்7 அல்ட்ரா அம்சங்கள் (POCO F7 Ultra Specifications): இந்த போக்கோ போனில் போக்கோ ஷீல்டு கிளாஸ் (POCO Shield Glass) பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் (3200 x 1440 பிக்சல்கள்) ப்ளோவ் அமோலெட் (Flow AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் டபுள்யூகியூஎச்டிபிளஸ் (WQHD+) ரெசொலூஷன், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

மேலும், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்2 ஓஎஸ் (Xiaomi HyperOS 2) பேக் செய்யப்பட்டுள்ளது.

120W ஃபாஸ்ட் சார்ஜிங் 5300mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த போக்கோவில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த போக்கோ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல்கள் இருக்கின்றன.

லைட் ஃப்புயூஷன் 800 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சாம்சங் எஸ்5கேகேடி1 சென்சாருடன் 32 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த போக்கோ போன் கொடுக்கிறது. மேலும், சாம்சங் எஸ்5கேஜேஎன்5 சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த போக்கோ எப்7 அல்ட்ராவின் ஆரம்ப விலை ரூ.55,690ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
POCO F7 Ultra To Launch India Soon POCO India CEO Confirmed Via Tweet Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X