Home
Mobile

இந்த போக்கோ 5ஜி போனுக்கு தான் உலகமே வெயிட்டிங்.. 6000mAh பேட்டரி.. 2K டிஸ்பிளே.. எந்த மாடல்?

போக்கோ (Poco) நிறுவனம் விரைவில் உலக சந்தையில் போக்கோ எப்7 அல்ட்ரா (Poco F7 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ரெட்மி கே80 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களுடன் இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போன் அறிமுகமாகும். ஆனாலும் அந்த ரெட்மி போனை விட சிறிய சிறிய மாற்றங்கள் இந்த புதிய போக்கோ போனில் இருக்கும்.

குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போன் வெளிவரும். அதேபோல் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-Hole Display) உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான போக்கோ எப்7 அல்ட்ரா போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்த போக்கோ 5ஜி போனுக்கு தான் உலகமே வெயிட்டிங்.. எந்த மாடல்?

போக்கோ எப்7 அல்ட்ரா அம்சங்கள் (Poco F7 Ultra Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் உடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி பிரைமரி கேமரா + 32எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போனில் உள்ளது.

2K பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) வசதியுடன் இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

6000mAh பேட்டரி உடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் (120W fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F7 Ultra specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X