மார்க்கெட்டே அதிர போகுது.. 7550mAh பேட்டரி.. 50MP கேமரா.. வருகிறது புது Poco 5ஜி போன்.. எந்த மாடல்?
போக்கோ எப்7 (Poco F7) ஸ்மார்ட்போன் விரைவில் ஆசிய நாடுகளில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த புதிய போக்கோ போன் இந்த மாத தொடக்கத்தில் FCC சான்றிதழைப் பெற்றுள்ளது. எனவே கூடிய விரைவில் ஆசிய நாடுகளில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதுவும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆசிய நாடுகளில் போக்கோ எப்7 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த புதிய போக்கோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

போக்கோ எப்7 அம்சங்கள் (Poco F7 specifications): ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் உடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது.
ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போக்கோ போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.
6.83 இன்ச் 1.5கே ஒஎல்இடி (1.5K OLED) டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1280x2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி எல்ஒய்டி-600 சென்சார் (LYT-600 sensor)+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போனில் உள்ளன.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 7550mAh பேட்டரி, 90W சார்ஜிங் போன்ற வசதிகளுடன் இந்த போக்கோ எப்7 போன் அறிமுகமாகும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








