போடு.. மிட்-ரேன்ஜ் விலையில் 7000mAh பேட்டரி, 90W சார்ஜிங்.. பட்டைய கிளப்பும் புது POCO போன்.. எந்த மாடல்?
2025 ஆம் ஆண்டில் போக்கோ நிறுவனமானது, அதன் மிகவும் பிரபலமான எக்ஸ் சீரீஸில், சில தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. நாம் இங்கே பேசுவது போக்கோ எப்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இதன்கீழ் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? போக்கோ எப்7 என்ன விலைக்கு வரும்? என்ன்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
போக்கோ எப்7 சீரீஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? இதன்கீழ் போக்கோ எப்7 (POCO F7), போக்கோ எப்7 ப்ரோ (POCO F7 Pro) மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா (POCO F7 Ultra) என மொத்தம் மூன்று மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மி டர்போ 4 ப்ரோ மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம்.

அதாவது சீனாவில் ரெட்மி டர்போ 4 ப்ரோ என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கின் கீழ் (அதே அம்சங்களுடன்) போக்கோ எப்7 ஆக வெளியாகும். பிந்தைய 2 மாடல்களும் (அதாவது போக்கோ எப்7 ப்ரோ மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா) ரெட்மி கே80 மற்றும் ரெட்மி கே80 ப்ரோவின் ரீபிராண்டட் வெர்ஷன்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட் (Snapdragon 8s Elite Chipset) உடன் வரும் என்கிறது. இந்த சிப்செட் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும், இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டின் அன்டர்லாக்டு வெர்ஷனாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டைவிட அதிக சக்தி வாய்ந்ததாகவும் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை விட சற்று குறைவான சக்தி வாய்ந்ததாகவும் இருக்கலாம். இந்த புதிய சிப்செட்டை கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆனது ஏப்ரல் 2025 முதல் சந்தைக்கு வரும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். ஆக போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் அறிமுகமாகும் அப்போதே நடக்கலாம்.
போக்கோ எப்7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக அதன் பேட்டரித்திறன் இருக்கும். இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7000mAh பேட்டரி உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5K LTPS AMOLED டிஸ்பிளேவை பேக்செய்யலாம். போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ரூ.29,999 என்கிற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதேபோன்ற விலைக்குறியுடன் (ரூ.30,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில்) போக்கோ எப்7 மாடலையும் நாம் எதிர்பார்க்கலாம்.
2025 தொடங்கியதும் வேறு என்னென்ன நிறுவனங்கள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன? ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது . இவ்விரு ஸ்மார்ட்போன்களும் ஜனவரி 7 ஆம் தேதியன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகமாகும்.
சாம்சங் நிறுவனமும் கூட அதன் கேலக்ஸி எஸ்25 சீரிஸை ஜனவரி இறுதிக்குள் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. ஆனால் சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுவாரசியமாக இம்முறை (அதாவது 2025 அம ஆண்டின் முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில்) கேலக்ஸி எஸ்25 சீரிஸில் 'கேலக்ஸி எஸ்25 ஸ்லிம்' என்கிற 4வது மாடலும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 13 5ஜி சீரிஸ் (Oppo Reno 13 5G Series) ஸ்மார்ட்போன்களை 2025 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சீரிஸில் ரெனோ 13 மற்றும் ரெனோ 13 ப்ரோ என மொத்தம் 2 மாடல்கள் உள்ளன. கடைசியாக சீன நிறுவனமான ஷாவ்மீ அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஷாவ்மீ 15 அல்ட்ராவை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவும் எப்படியும் ஜனவரி மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








