Home
Mobile

மிரள வைக்கும் Poco.. 7550mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எப்7 (Poco F7) ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது போக்கோ எப்7 போன் தற்போது FCC சான்றிதழ் தளத்தில் 25053PC47G என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் சீனாவில் ரெட்மி டர்போ 4 ப்ரோ (Redmi Turbo 4 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் தான் போக்கோ எப்7 எனும் பெயரில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்தப் போக்கோ எப்7 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மிரள வைக்கும் Poco.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எப்7 அம்சங்கள் (Poco F7 specifications): 6.83 1.5கே ஒஎல்இடி (1.5K OLED) டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1280x2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் உடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது. அதேபோல் ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி எல்ஒய்டி-600 சென்சார் (LYT-600 sensor)+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போனில் உள்ளன.

மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 7550mAh பேட்டரி, 90W சார்ஜிங் போன்ற வசதிகளுடன் இந்த போக்கோ எப்7 போன் அறிமுகமாகும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.25,000 அல்லது ரூ.30,000 பட்ஜெட்டில் போக்கோ எப்7 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பா இந்த புதிய போக்கோ போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F7 spotted on FCC certification site: Could launch soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X