Poco கொடுத்த புதிய சர்ப்ரைஸ்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. வருகிறது புதிய போன்கள்..எந்த மாடல்?
போக்கோ எப்7 ப்ரோ (Poco F7 Pro) மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா (Poco F7 Ultra) ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 27-ம் தேதி இந்த புதிய போக்கோ எப்7 சீரிஸ் (Poco F7 series) உலக சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய போக்கோ போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
போக்கோ எப்7 ப்ரோ மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ எப்7 அல்ட்ரா அம்சங்கள் (Poco F7 Ultra specifications): 50எம்பி பிரைமரி கேமரா + 32எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும. மேலும் 20எம்பி செல்பி கேமரா இதில் உள்ளது.
அதேபோல் 6.7-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனில் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன்) உடன் வெளிவரும் இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.
மேலும் 6000mAh பேட்டரி உடன் போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளன. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ எப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு இந்த போக்கோ எப்7 அல்ட்ரா ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








