Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புதிய Poco போன்.. 7550mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் போக்கோ எப்7 (Poco F7) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும் ஜூலை 1 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் விற்பனைக்கு இந்த போன் விற்பனைக்கு வந்தது. குறிப்பாக விற்பனைக்கு வந்த ஒரு ஒரு மணி நேரத்திற்குள் போன் ஸ்டாக் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் அறிவித்தது.

தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் ஜூலை 4-ம் தேதி மதியம் 12 மணி அளவில் சலுகைகள் உடன் இந்த போன் விற்பனைக்கு வரும்.

நாளை விற்பனைக்கு வரும் புதிய Poco போன்.. 7550mAh பேட்டரி..  எந்த மாடல்

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.31,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.33,999 ஆகும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்படுகிறது. இப்போது போக்கோ எப்7 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எப்7 அம்சங்கள் (Poco F7 specifications): 6.83 இன்ச் 1.5கே ஒஎல்இடி (1.5K OLED) டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 1280x2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் உடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போக்கோ போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளியாகும். ஹைப்பர் ஓஎஸ் 2 (HyperOS 2) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போக்கோ போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி Sony IMX882 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போனில் உள்ளன

7550mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் ஆதரவுடன் போக்கோ எப்7 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இந்த போனில் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO F7 second sale starts tomorrow: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X