மிட்-ரேஞ்ச் மிரளுது.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. OIS கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த மிட்-ரேஞ்ச் மாடல்களையும் தூக்கி சாப்பிடும்படி 90W ஹைப்பர் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி, லைட் ப்யூசன் சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, 2K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்ட மாடலாக போக்கோ எப்7 ப்ரோ (POCO F7 Pro) களமிறங்கி இருக்கிறது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், லிக்விட் கூல் டெக்னாலஜி, மெட்டல் மிடில் ஃபிரேம் போன்ற பில்ட்-குவாலிட்டியிலும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கும் இந்த போக்கோ எப்7 ப்ரோ போனானது, டிசைன் மற்றும் பீச்சர்களில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. க்ளோஸ்-மேட் பினிஷிங் (Gloss-matte Finish) பேனல் மற்றும் மெட்டல் மிடில் ஃபிரேம் கொடுக்கிறது. பிரீமியம் டயல் கேமரா பம்ப் டிசைனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.

போக்கோ எப்7 ப்ரோ அம்சங்கள் (POCO F7 Pro Specifications): இந்த போக்கோ போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) மற்றும் சர்க்குலர் போலரைசேஷன் டெக்னாலஜி (Circular Polarization Technology) கொண்ட 6.67 இன்ச் (3200 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 3200 நிட்ஸ் பீக் பிரைடன்ஸ் உள்ளது.
மேலும், 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 526 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 68 பில்லியன் கலர் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக, கேமிங் பிரியர்களுக்காக 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் சூப்பர் ரெசொலூஷன் ரென்டரிங் (Super Resolution Rendering) கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது.
3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, ப்ரோ எச்டிஆர் (Pro HDR), 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் P3 கலர் காமட் வருகிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2.0 (Xiaomi HyperOS 2.0) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த போக்கோ எப்7 ப்ரோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
மெயின் கேமராவில் லைட் ஃப்யூசன் 800 (Light Fusion 800) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் + எல்க்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 20 எம்பி செல்பீ வருகிறது. பிரீமியம் போட்டோகிராபி அவுட்புட் கொடுக்க போக்கோ ஏஐஎஸ்பி (POCO AISP) சப்போர்ட் கிடைக்கிறது.
சியோமி ஹைப்பர்ஏஐ (Xiaomi HyperAI) மூலம் ஏஐ ரைட்டிங் (AI Writing), ஏஐ ஸ்பீச் ரெககனைசேஷன் (AI Speech Recognition), ஏஐ இன்டர்பிரிட்டர் (AI Interpreter) மற்றும் ஏஐ சர்ச்ச் (AI Search) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. IP68 ரெசிஸ்டன்ட், 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000Ah பேட்டரி உள்ளது.
இந்த போக்கோ எப்7 ப்ரோ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.42,820ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.47,110ஆகவும் இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வருகிறது. இதே விலையில் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. சில்வர், ப்ளூ மற்றும் பிளாக் கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








