Home
Mobile

மார்ச் 27 குறிச்சாச்சு.. மொத்தமா முடிக்க வருது.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

குளோபல் மார்கெட் மிரளும்படியான பீச்சர்களுடன் போக்கோ எப்7 ப்ரோ (POCO F7 Pro) மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா (POCO F7 Ultra) போன்கள் களமிறங்க இருக்கின்றன. இந்த பிரீமியம் மாடல்களின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கும் நேரத்தில் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இவை போக்கோ பிரியர்களை மட்டுமல்லாமல் மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டித் தூக்கும்படி இருக்கிறது. இந்த போக்கோ போன்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 27ஆம் தேதி குளோபல் மார்கெட்டில் இந்த போக்கோ எப்7 சீரிஸ் மாடல்கள் வெளியாகின்றன. சிங்கப்பூரில் நடக்கும் இவென்ட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அதன்பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாவது குறித்த தகவல்களை எதிர்பார்க்கலாம். இந்த போன்களின் பீச்சர்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மார்ச் 27 குறிச்சாச்சு.. மொத்தமா முடிக்க வருது.. 6000mAh பேட்டரி!

போக்கோ எப்7 ப்ரோ அம்சங்கள் (POCO F7 Pro Specifications): இந்த போக்கோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2) கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 2 மாடல்கள் இருக்கின்றன.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. 6.67 இன்ச் (3200 X 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 526 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இந்த போக்கோ எப்7 ப்ரோ போனில் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

இந்த கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் 8 எம்பி செகண்ட்ரி கேமரா கிடைக்கிறது. மேலும் 20 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. கேமிங் பிரியர்கள் எதிர்பார்க்கும்படி 6,000mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. மேலும், IP68 ரெசிஸ்டன்ட், 8.12 எம்எம் தடிமன் வருகிறது.

6,000mAh பேட்டரி கிடைத்தும், 206 கிராம் எடை மட்டுமே இருக்கிறது. இந்த போக்கோ எப்7 ப்ரோ போனில் ப்ளூ (Blue), சில்வர் (Silver) மற்றும் பிளாக் (Black) கலர்கள் வெளியாக இருக்கின்றன. பஞ்ச்-ஹோல் கட்அவுட் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த போனின் விலை விவரங்களுக்கு முன்பு போக்கோ எப்7 அல்ட்ரா போனின் பீச்சர்களை பார்ப்போம்.

போக்கோ எப்7 அல்ட்ரா அம்சங்கள் (POCO F7 Ultra Specifications): இந்த போக்கோ அல்ட்ரா மாடலில் பீச்சர்களும் அல்ட்ரா பிரீமியமாகவே இருக்கின்றன. கேமராவில் பின்னிப்பெடல் எடுக்கும்படி ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. அதேபோல 50 எம்பி டெலிபோட்டோ கேமராவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி உள்ளது.

இதுபோக 32 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா (Ultra Wide Angle) கேமரா கிடைக்கிறது. இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆகவே, கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த போன் இருக்கப் போகிறது. பேட்டரியில் தட்டித்தூக்கி இருக்கிறது. அதாவது, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) கிடைக்கிறது.

இந்த போக்கோ போனில் 6.67 இன்ச் (3200 X 1440 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் முந்தைய மாடலை போலவே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 526 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு ஹைப்பர்ஓஎஸ் 2 பேக் செய்கிறது. இந்த பிரீமியம் ஏஐ மற்றும் கேமரா பீச்சர்களை இந்த ஹைப்பர்ஓஎஸ் 2 கொடுக்க இருக்கிறது.

இந்த போக்கோ எப்7 அல்ட்ரா போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இதுபோக 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வர இருக்கிறது. இந்த ரேம் மற்றும் மெரிக்கு ஏற்ப ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டனட் (Water & Dust Resistant) கிடைக்கிறது.

8.39 எம்எம் தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொண்டிருக்கிறது. பிளாக் (Black) மற்றும் எல்லோ (Yellow) கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. மேற்கண்ட் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. போக்கோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. மார்ச் 27ஆம் தேதி குளோபல் மார்கெட்டுக்கு வருவதும், பிளாக் மற்றும் எல்லோ கலர்கள் அடங்கிய டிசைனில் வெளியாவதும் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

போக்கோ எப்7 ப்ரோ, எப்7 அல்ட்ரா (POCO F7 Pro, F7 Ultra Price): இந்த போன்கள் மிட்-பிரீமியம் மாடல்களாக வெளியாக இருக்கின்றன. ஆகவே, போக்கோ எப்7 ப்ரோ போனின் ஆரம்ப விலை ரூ.56,600 ஆக இருக்கப் போகிறது. அதேபோல போக்கோ எப்7 அல்ட்ரா போனில் ஆரம்ப விலை ரூ.70,800ஆக இருக்கப் போகிறது. இந்தியாவில் வெளியாக வாய்ப்புகள் குறைவாகும். குளோபல் வெளியீட்டு பிறகு தெரிய வரும்.

இதேபோல 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் போக்கோ எப்6 ப்ரோ (POCO F6 Pro) வெளியாகியது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கிடைத்து. 12 ரேம் மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம் வேரியண்ட்டும் வெளியாகியது. இதுபோக 5000mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்தது. அமோலெட் டிஸ்பிளே கிடைத்தது.

Take a Poll

இருப்பினும், டபுள்யூகிஎச்டி (WQHD) ரெசொலூஷன் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்தது. லைட் ப்யூசன் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வந்தது. டெலிபோட்டோ மட்டும் இடம்பெறவில்லை. இருந்தும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைத்தது. இவ்வளவு பீச்சர்களை கொடுத்தும் ரூ.37,395 பட்ஜெட்டில் களமிறங்கியது. இதைவிட கூடுதல் பீச்சர்களை எப்7 சீரிஸ் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO F7 Pro And POCO F7 Ultra To Launch March 27 For Global Markets Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X