Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய Poco போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் விரைவில் போக்கோ எப்7 (Poco F7) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் போக்கோ எப்7 ப்ரோ மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா போன்கள் அறிமுகம் செய்யப்பட இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எப்7 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

போக்கோ எப்7 அம்சங்கள் (Poco F7 Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8400-அல்ட்ரா எஸ்ஒஎசி சிப்செட் வசதியுடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டைமன்சிட்டி சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Poco போன்.. எந்த மாடல்?

HyperOS 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த போக்கோ எப்7 அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே(6.67-inch 1.5K OLED display) உடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு, எச்டிஆர் 10, டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போக்கோ போன்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது. அதேபோல் தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த போக்கோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

6500mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போக்கோ எப்7 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய போக்கோ போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credit: xiaomi

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F7 key specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X