மிரள வைக்கும் போக்கோ.. 7550mAh பேட்டரி.. சோனி கேமரா.. வருகிறது புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?
போக்கோ எப்7 (Poco F7) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட தகவலின்படி, வரும் ஜூன் 25 ஆம் தேதி இந்தோனேசியாவில் இந்த போன் அறிமுகப்படுத்தப்படும் . அதே நாளில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஆனால் போக்கோ எப்7 போனின் அறிமுக தேதியை போக்கோ நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யவில்லை. அதேபோல் இந்தியாவில் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ எப்7 அம்சங்கள் (Poco F7 specifications): 6.83 இன்ச் 1.5கே ஒஎல்இடி (1.5K OLED) டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் வெளிவரும். 1280x2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் உடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளியாகும். ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போக்கோ போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி எல்ஒய்டி-600 சென்சார் (LYT-600 sensor)+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போனில் உள்ளன.
7550mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் ஆதரவுடன் போக்கோ எப்7 போன் அறிமுகமாகும். இந்த போனில் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








