வாங்குனா இதை வாங்கணும்.. POCO-வின் புது போன்.. 7550mAh பேட்டரி, 16GB ரேம், OIS கேமரா, IP69.. மாடல், விலை?
போக்கோ நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஜூன் மாத இறுதியில், போக்கோ நிறுவனம் அதன் போக்கோ எப்7 (Poco F7) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த புதிய போக்கோ எப்-சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கான லேண்டிங் பேஜ் தற்போது பிளிப்கார்ட் பக்கத்தில் நேரலையில் உள்ளது. ஆக போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரையிலாக போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் - இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி டர்போ 4 ப்ரோ (Redmi Turbo 4 Pro) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ எப்7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் சிப்செட்டை பொறுத்தவரை இது 16GB வரை ரேம் மற்றும் 512GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Qualcomm Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம்.
கேமராவைப் பொறுத்தவரை, இது OIS உடன் 50எம்பி சோனி IMX766 ப்ரைமரி சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், இது 20எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்லாம்
பேட்டரியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,550mAh பேட்டரியை பேக் செய்யலாம். லீக் ஆன மற்ற விவரங்களை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 கஸ்டம் யுஐ, ஐபி68 / ஐபி69 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு, ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவைகளை கொண்டிருக்கலாம்
மேற்கண்ட எந்த விவரங்களும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது மேற்குறிப்பிட்ட ரெட்மி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட எடிஷன் ஆக இருந்தால் மட்டுமே இந்த அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்பதையும் மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்.
இந்தியாவில் போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை சுமார் ரூ.34,999 க்கு வரலாம். நினைவூட்டும் வண்ணம் போக்கோ எப்6 இந்தியாவில் ரூ.29,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஷாவ்மீ நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டை (HyperOS 2.2 Update) பெறலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்டஹ்க்கட்டு
ஷாவ்மீ நிறுவனம் ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டை ரிலீஸ் செய்ய "கிட்டத்தட்ட" தயாராக உள்ளது. ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டின் டின் அதிகாரப்பூர்வ சேஞ்ச்லாக் இன்னும் "மறைக்கப்பட்டு" உள்ள நிலையில், சிஸ்டம் முழுவதுமாக பல மேம்பாடுகள் மற்றும் சில யுஐ அப்டேட்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். கூடவே சில புதிய அம்சங்களையும், ஷாவ்மீ ஈகோசிஸ்டமின் சிறந்த ஒருங்கிணைப்பையும் நாம் காணலாம்.
எந்தெந்த ஷாவ்மீ மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட் கிடைக்கும்?
1. போக்கோ எப்7 (POCO F7) / ரெட்மி டர்போ 4 ப்ரோ (REDMI Turbo 4 Pro)
2. போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 Pro 5G) / ரெட்மி நோட் 14 (Redmi Note 14)
3. போக்கோ எக்ஸ்7 (POCO X7) / ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro)
4. ரெட்மி கே70 (Redmi K70) / போக்கோ எப்6 ப்ரோ (POCO F6 Pro)
5. ரெட்மி கே70இ (Redmi K70E) / போக்கோ எக்ஸ்6 ப்ரோ (POCO X6 Pro)
6. ஷாவ்மீ 14 (Xiaomi 14)
7. ஷாவ்மீ 14 ப்ரோ (Xiaomi 14 Pro)
8. ஷாவ்மீ 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra)
9. ஷாவ்மீ 15 (Xiaomi 15)
10. ஷாவ்மீ 15 ப்ரோ (Xiaomi 15 Pro)
11. ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra)


Click it and Unblock the Notifications