மார்க்கெட்டே மிரள போகுது.. OLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. புதிய போக்கோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
போக்கோ எப்7 (Poco F7) ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது முதலில் ஐரோப்பிய சந்தையில் (European market) அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது EEC தரவு தளத்தில் 25053PC47G என்ற மாடல் நம்பர் உடன் போக்கோ எப்7 போன் காணப்பட்டது.
எனவே வரும் வாரங்களில் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமாகும். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த போக்கோ எப்7 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எப்7 அம்சங்கள் (Poco F7 Specifications): 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே(6.67-inch 1.5K OLED display) உடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு, எச்டிஆர் 10, டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
மீடியாடெக் டைமன்சிட்டி 8400-அல்ட்ரா (MediaTek Dimensity 8400 Ultra) சிப்செட் வசதியுடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டைமன்சிட்டி சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
HyperOS 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த போக்கோ எப்7 அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது.
எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த போனில் உள்ளது. அதேபோல் தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த போக்கோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போக்கோ எப்7 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் 6550mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
photo credit: techlusive


Click it and Unblock the Notifications