Home
Mobile

ரெடியா இருங்க.. 7550mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புது Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எப்7 (Poco F7) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது இந்த புதிய போன் போனின் உலகளாவிய வெளியீடு ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை நடைபெறும் என்றும், இந்திய வெளியீடு இந்த காலகட்டத்தில்தான் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் உலக நாடுகளில் போக்கோ எப்7 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதுவும் 7550mAh பேட்டரி, ஐபி69 ரேட்டிங், ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெடியா இருங்க.. இந்தியாவுக்கு வரும் புது Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எப்7 அம்சங்கள் (Poco F7 specifications): 6.83 இன்ச் 1.5கே ஒஎல்இடி (1.5K OLED) டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் வெளிவரும். இதன் டிஸ்பிளேவில் 1280x2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் உடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

தனித்துவமான ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போக்கோ போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் போக்கோ எப்7 போனின் வடிவமைப்புக்கு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

50எம்பி எல்ஒய்டி-600 சென்சார் (LYT-600 sensor)+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட்
சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போக்கோ எப்7 ஸ்மார்ட்போனில் உள்ளன.

7550mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் ஆதரவுடன் போக்கோ எப்7 போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
POCO F7 coming soon to India: Expected date and specifications leaked online silently launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X