வாங்குனா இப்ப வாங்கனும்.. ஆஃபர் ரேட்ல 7550mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
2026 ஆம் ஆண்டுக்கான பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் (Flipkart Republic Day Sale) போகோ ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் 7550mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட போகோ எப்7 5ஜி (POCO F7 5G) ஸ்மார்ட்போன் மலிவான விலைக்கு கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 11 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.31,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.30,999 விலைக்கு இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

போகோ எப்7 5ஜி அம்சங்கள் (POCO F7 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட்டை இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது. 4 ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. மேலும், 6000 எம்எம் 3டி ஐஸ்லூப் கூலிங் (3D IceLoop Cooling) மற்றும் ரேஜ் என்ஜின் 4.0 (Rage Engine 4.0) கொண்டுள்ளது. 6.83 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த போகோ எப்7 5ஜி கொண்டுள்ளது.

1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை இந்த டிஸ்பிளே கொடுத்துள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்டுள்ளது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைத்துள்ளது. 20 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது.
ஓம்னிவிஷன் ஓவி20பி (OV20B) சென்சார் மற்றும் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைத்துள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7550mAh பேட்டரியை இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுத்து இருக்கிறது.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளது. ஃப்ரோஸ்ட் ஒயிட் (Frost White), ஃபேண்டம் பிளாக் (Phantom Black) மற்றும் சைபர் சில்வர் எடிஷன் (Cyber Silver Edition) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








