Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. SALE-க்கு வந்தது 7550mAh பேட்டரி போன்.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 12GB ரேம் மாடல்!

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக வெளியான போகோ எப்7 5ஜி (POCO F7 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆரம்பமே, ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பேட்டரி மட்டுமல்லாமல், கேமரா, சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளோ போன்ற மற்ற முக்கிய பீச்சர்களிலும் மிட்-பிரீமியம் காட்டி இருக்கும், இந்த போகோ போனின் விவரம் இதோ.

ஆன்லைன் கேமிங் மற்றும் ஓடிடி ஆப்களின் பயன்பாடு அதிகரித்து வருதால், அதற்கு ஏற்ப பேட்டரி பேக்கப் கொடுக்கும் மாடல்களில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கவனம் செலுத்துவது தெரிகிறது. ஏனென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் 6000mAh பேட்டரி கொண்ட மாடல்களே அதிக கேபாசிட்டி கொண்டவையாக இருந்தன. ஆனால், 2025ஆம் ஆண்டில் நிலைமையே மாறிவிட்டது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. SALE-க்கு வந்தது 7550mAh பேட்டரி போன்!

7300mAh பேட்டரி கொண்ட மாடல்கள் பட்ஜெட் விலையில் கிடைக்க தொடங்கிவிட்டன. ஐக்யூ இசட் 10 (iQOO Z10), விவோ டி4 5ஜி (Vivo T4 5G), ஓப்போ கே13 5ஜி (Oppo K13 5G) போன்ற போன்கள் 7000mAh மற்றும் அதற்கு மேலான பேட்டரி செக்மெண்ட்டில் கிடைக்கின்றன. அதிகபட்சம் 7300mAh பேட்டரி மட்டுமே அதிக கேபாசிட்டியாக இருந்தது. இந்த மாடல்களை போகோ எப்7 5ஜி தூக்கி சாப்பிட்டுவிட்டது.

ஜூன் 24ஆம் தேதி வெளியான இந்த போனானது, 7550mAh பேட்டரியுடன் இந்தியாவிலேயே அதிக கேபாசிட்டி கொண்ட மாடலாக வந்தது. இதுபோக 90W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இதனாலேயே விற்பனை எப்போது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. SALE-க்கு வந்தது 7550mAh பேட்டரி போன்!

இந்த நேரத்தில் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டிஸ்கவுண்ட் போக இன்று ஆர்டர் செய்ய கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி அல்லது 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. அதேபோல 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.33,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மார்கெட் விலையில் இருந்து ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்ய முடிகிறது. ஆனால், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ போன்ற குறிப்பிட்ட கார்டுகளுக்கு மட்டுமே இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஆரம்ப மாடலின் விலை ரூ.31,999 பட்ஜெட்டில் இருந்து ரூ.2,000 போக ஆர்டர் செய்யலாம். ரூ.29,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

பேட்டரி மட்டும் போதுமா? மற்ற பீச்சர்கள் எப்படி என்று கேட்பது புரிகிறது. இந்த போகோ எப்7 5ஜி போனானது மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைப்பதால் மற்ற பீச்சர்களும் சொல்லிக் கொள்ளும்படி நன்றாகவே இருக்கின்றன. ஆகவே, பெரிய பேட்டரிக்கு ஏற்ப 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளது.

இது கிட்டத்தட்ட கேமிங் மாடலாகவே இருப்பதால், அதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டோ கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core 4nm Snapdragon 8s Gen 4) சிப்செட்டை கொடுக்கிறது. அட்ரினோ 825 ஜிபியு கிராபிக்ஸ் மற்றும் 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 6.83 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை பெற்று கொள்ளலாம். 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO F7 5G With 50MP Camera Available For Sale Under Rs 30000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X