Home
Mobile

செம்ம டிமாண்ட்டில் POCO.. 12GB ரேம்.. 7550mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

போகோ நிறுவனத்தின் போகோ எப்7 5ஜி (POCO F7 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரிய பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் விரும்பும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. விலை விவரங்களை பார்த்துவிட்டு, பீச்சர்களுக்கு செல்லலாம்.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,800 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.34,199 விலைக்கு இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.

செம்ம டிமாண்ட்டில் POCO.. 12GB ரேம்.. 7550mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் சிப்செட்டையும் கொடுத்துள்ளது. இந்த அவுட்புட்டுக்கு ஏற்ப பேக்கப் எதிர்பார்க்கும்படி பெரிய பேட்டரியை கொடுத்துள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங்கிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

போகோ எப்7 5ஜி அம்சங்கள் (POCO F7 5G Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.83 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

இதுபோக ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) உள்ளது.

4 ஓஎஸ் அப்கிரேட்களை இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட்டை இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

சிப்செட் மட்டுமல்லாமல், ஹார்ட்வேர் லெவல் 3டி ஐஸ்லூப் கூலிங் (3D IceLoop Cooling) கிடைக்கிறது. ரேஜ் என்ஜின் 4.0 (Rage Engine 4.0) கொண்ட மாடலாகவும் இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த போகோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. ஓம்னிவிஷன் ஓவி20பி (OV20B) சென்சாருடன் 20 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7550mAh பேட்டரி கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
POCO F7 5G With 12 GB RAM Gets Rs 1800 Discount on Flipkart Sale Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X