Home
Mobile

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Poco 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 7550mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

போக்கோ நிறுவனம் தனது போக்கோ எப்7 5ஜி (Poco F7 5G) ஸ்மார்ட்போனை நாளை (ஜூன் 24) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் நாளை மாலை 5.30 மணி அளவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். அதுவும் தனித்துவமான டிசைன் மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகமாகும்.

போக்கோ எப்7 5ஜி அம்சங்கள் (Poco F7 5G specifications): ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் உடன் போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Poco 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்..

6.83 இன்ச் 1.5கே ஒஎல்இடி (1.5K OLED) டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். 1280x2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளியாகும். ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போக்கோ போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி எல்ஒய்டி-600 சென்சார் (LYT-600 sensor)+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

அதேபோல் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

குறிப்பாக 7550mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் ஆதரவுடன் போக்கோ எப்7 5ஜி போன் அறிமுகமாகும். இந்த போனில் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.30,000 பட்டிஜெட்டில் இந்த புதிய போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F7 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X