விட்ராதீங்க ப்ரோ.. 7550mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 7550mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட போகோ எப்7 5ஜி (POCO F7 5G) போனின் விற்பனை நாளை தொடங்க இருக்கிறது. இந்த போகோ எப்7 5ஜி போனின் மார்கெட் விலை என்ன? டிஸ்கவுண்ட் எப்படி? என்னென்ன பீச்சர்கள் வருகின்றன? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
போகோ எப்7 5ஜி அம்சங்கள் (POCO F7 5G Flipkart Sale): இந்த போகோ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும் இருக்கிறது. மல்டிபிள் பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் வருகிறது.

ஆகவே, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, எச்டிஎப்சி கிரெடிட் கார்டு, எஸ்பிஐ கிரெடிட் கார்டு ஆகியவை மட்டுமல்லாமல், இந்த பேங்குகளின் டெபிட் கார்டுகளுக்கும் ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் வருகிறது. இந்த டிஸ்கவுண்ட் போக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.29,999 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.31,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம்.
மேலும், ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் 1 வருட கூடுதல் வாரண்டி கிடைக்கிறது. இதுபோக ரூ.10,000 மதிப்பில் 1 வருடத்துக்கான ஸ்கிரீன் ரீப்பிளேஸ்மெண்ட் கிடைக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மற்ற பீச்சர்களை பார்ப்போம்.
போகோ எப்7 5ஜி அம்சங்கள் (POCO F7 5G Specifications): பிரீமியமான வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. இந்த புரொடெக்சனுடன் 6.83 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், கேமிங் பிரியர்களுக்காக 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதுபோக ஓடிடி பிரியர்களுக்காக டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கான பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கான பிரீமியம் அவுட்புட் இந்த போகோ எப்7 5ஜி போனில் கிடைக்கும்.
இதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்க அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் 4என்எம் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core 4nm Snapdragon 8s Gen 4) சிப்செட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் கேமிங் மற்றும் கேமரா பீச்சர்களை கொடுக்கும்படி சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு மாடலாகும்.
இந்த போகோ எப்7 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி சென்சார், ஓஐஎஸ், ஈஐஎஸ் மற்றும் 4K வீடியோ ஷூட் கிடைக்கிறது. ஓவி20பி சென்சாருடன் 20 எம்பி செல்பீ கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7550mAh பேட்டரி கிடைக்கிறது. இந்தியாவில் அதிக பேட்டரி கேபாசிட்டி இதுவாகும்.


Click it and Unblock the Notifications