Home
Mobile

விலை குறைச்சதும் ஆர்டர்களை போட்டு தாக்கும் POCO போன்.. 5ஜி, 12GB ரேம், 7550mAh பேட்டரி.. எந்த மாடல்?

போக்கோ (POCO) நிறுவனத்தின் எப்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது வேண்டுமானாலும் உலகலளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவுகிறது. இந்த சீரீஸின் கீழ் போக்கோ எப்8 அல்ட்ரா (Poco F8 Ultra) மற்றும் போக்கோ எப்8 ப்ரோ (Poco F8 Pro) என 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் "புதிய மாடல்களின்" வருகையை ஒட்டி முன்னதாக அறிமுகமான போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் மீது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.30,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

விலை குறைச்சதும் ஆர்டர்களை போட்டு தாக்கும் POCO போன்!

மேலும் வங்கி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளுடன் சேர்த்து இது ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கும் என்றும் பிளிப்கார்ட்டின் மொபைல் ஆபர் பேனர் தெரிவிக்கிறது. நினைவூட்டும் வண்ணம் போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கு அறிமுகமானது. ஆக நேரடியாக ரூ.1000 மற்றும் அனைத்து சலுகைகளின் கீழ் ரூ.2000 என மொத்தம் ரூ.3000 டிஸ்கவுண்ட் விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

போக்கோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD+ (1280 x 2772 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

இந்த பேனல் 2,560Hz வரை இன்ஸ்டன்டனேஷியஸ்டச் சாம்ப்ளிங் ரேட், 3840Hz PWM டிம்மிங் மற்றும் 3,200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸையும் வழங்குகிறது. மேலும் இந்த டிஸ்பிளே HDR10+ ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பையும் பெறுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 12GB வரை LPDDR5X RAM மற்றும் 512GB வரை UFS4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும், ஏஐ நோட்ஸ், ஏஐ இன்டர்ப்ரெட்டர், ஏஐ இமேஜ் என்ஹான்ஸ்மென்ட், ஏஐ இமேஜ் எக்ஸ்பான்ஷன் மற்றும் பல ஏஐ டூல்களையும் ஆதரிக்கிறது.

கேமராவை பொறுத்தவரை போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டருடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சாரை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ ஆதரவுடன் கூடிய வெப்பநிலை கட்டுப்பாடு கொண்ட 3டி ஐஸ்லூப் சிஸ்டம் மற்றும் வெப்பச் சிதறலுக்கான 6,000 மிமீ சதுர வேப்பர் கூலிங் சேம்பர் ஆகியவைகளும் உள்ளன. இது வைல்ட்பூஸ்ட் ஆப்டிமைசேஷன் 3.0-ஐயும் ஆதரிக்கிறது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில்டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டமும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 7550mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் IP66 + IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடுகளை பூர்த்தி செய்கிறது. இது ஒரு அலுமினிய மிடில் பிரேம் மற்றும் ஒரு கிளாஸ் பேனலை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-C போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் 7.98மிமீ மற்றும் எடையில் 222 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO F7 5G Price Dropped in Flipkart Ahead Poco F8 Series Global Launch is nearby
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X