பேசாமல் இருந்திருக்கலாம்.. சொல்லி மாட்டிகிட்டோமே.. Nothing Phone 3 க்கு வெடி வச்ச POCO-வின் புது போன்!
நத்திங் நிறுவனம் வருகிற ஜூலை 1 ஆம் தேதியன்று அதன் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இது எங்களுடைய "உண்மையான பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" ஆக இருக்கும் என்று ஓவர் பில்டப் செய்து வந்த நத்திங் நிறுவனம் சமீபத்தில் நத்திங் போன் 3 மாடலின் சிப்செட்டை உறுதிப்படுத்தி இருந்தது.
அது - ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் ஆகும். ஆரம்பத்தில் இது ரூ.90,000 க்கு மேல் என்கிற விலைக்கு வரும் என்று பேச்சுக்கள் அடிப்பட்டதால், இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை!

இருப்பினும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இருக்கும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் ஆனது ஹை-எண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆக இல்லையென்றாலும், பழைய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை விட சிறந்ததாக இருக்கும். அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் "உண்மையான பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" என்கிற கூற்றுதான் இங்கே கொஞ்சம் இடிக்கிறது!
இப்படி ஏற்கனவே சறுக்கலில் உள்ள நத்திங் போன் 3 மாடலின் கால்களை பிடித்து இன்னும் கீழே இழுத்துவிடும்படியாக போக்கோ நிறுவன அதன் போக்க்கோ எஃப்7 5ஜி (POCO F7 5G) ஸ்மார்ட்போனில் "அதே" ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் இடம்பெறும் என்பதை உறுதிபடுத்தி உள்ளது
இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு எக்ஸ் பதிவின் வழியாக இந்த போன் அன்டுடு பெஞ்ச்மார்க்கில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை பெற முடிந்தது என்று போக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் யுஎப்எஸ் 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜை ஆதரிக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக போக்கோ நிறுவனம் எந்த பில்டப்களும் இல்லாமல் சாதாரணமாக பேக் செய்யும் ஒரு சிப்செட்டை, நத்திங் நிறுவனம் ஆனது நிறுவனத்தின் முதல் உண்மையான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்றெல்லாம் கூறி பயங்கரமாக விளம்பரப்படுத்துகிறது. இதில் இன்னும் ஹைலைட் ஆன மேட்டர் என்னவென்றால் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் தான்!

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது போட்டித்தன்மை உடனான விலை நிர்ணயத்தையே பெறும். அதுவும் கூட சுமார் $799 (ரூ.68,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.34,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்ளோதான்ங்க மேட்டர்!
போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? பிளிப்கார்ட் (Flipkart) வழியாக கிடைக்கும் அதிகாரப்பூர்வ டீஸர்கள் வழியாக போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனில் 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7550mAh பேட்டரி இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, 22.5W வரையிலான ஸ்பீடில் மற்ற டிவைஸ்களை சார்ஜ் செய்ய இதை ஒரு பவர் பேங்காக பயன்படுத்தலாம் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டீஸர் போட்டோவில் போக்கோ எப்7 மாடலின் ஸ்பெஷல் கலர் வேரியண்ட்டை காண முடிகிறது. மேலும் இது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் .
கேமராவைப் பொறுத்தவரை, இது OIS உடன் 50எம்பி சோனி IMX766 ப்ரைமரி சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், இது 20எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்லாம்
பேட்டரியை பொறுத்தவரை (முன்னரே குறிப்பிட்டபடி) இந்த ஸ்மார்ட்போன் 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,550mAh பேட்டரியை பேக் செய்யும். மற்ற விவரங்களை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 கஸ்டம் யுஐ, ஐபி68 / ஐபி69 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு, ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








