விலை இவ்ளோ தானா.. அப்போ ஆர்டர் தெறிக்குமே.. 7550mAh பேட்டரி.. POCO-வின் புது போன்.. ஜூலை 1 முதல் SALE!
போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக போக்கோ எப்7 5ஜி (Poco F7 5G) இந்தியாவிலும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளிலும் இன்று (ஜூன் 24) அறிமுகப்படுத்தப்பட்டது. என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது? விரிவான அம்சங்கள் என்னென்ன? என்ன விலை? எப்போது விற்பனை? இதோ விவரங்கள்:
போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் வருகிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் 6,000mm sq வேப்பர் கூலிங் சேம்பர் பொருத்தப்பட்டுள்ளது.
- இது ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) கொண்டு இயங்குகிறது.

- இது 50-மெகாபிக்சல் சோனி IMX882 சென்சார் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது
- இது 20-மெகாபிக்சல் செல்பீ ஸ்னாப்பரை கொண்டுள்ளது
- இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்களை பெற்றுள்ளது
- இந்திய வேரியண்டில் 7,550mAh பேட்டரி உள்ளது; க்ளோபல் வேரியண்டில் 6,500mAh பேட்டரி உள்ளது.
போக்கோ எஃப்7 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD+ (1280 x 2772 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

இந்த பேனல் 2,560Hz வரை இன்ஸ்டன்டனேஷியஸ்டச் சாம்ப்ளிங் ரேட், 3840Hz PWM டிம்மிங் மற்றும் 3,200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸையும் வழங்குகிறது. மேலும் இந்த டிஸ்பிளே HDR10+ ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பையும் பெறுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 12GB வரை LPDDR5X RAM மற்றும் 512GB வரை UFS4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 2.0 உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஆண்டுகளுக்கு மேஜர் ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும், ஏஐ நோட்ஸ், ஏஐ இன்டர்ப்ரெட்டர், ஏஐ இமேஜ் என்ஹான்ஸ்மென்ட், ஏஐ இமேஜ் எக்ஸ்பான்ஷன் மற்றும் பல ஏஐ டூல்களையும் ஆதரிக்கிறது.
கேமராவை பொறுத்தவரை போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டருடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சாரை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ ஆதரவுடன் கூடிய வெப்பநிலை கட்டுப்பாடு கொண்ட 3டி ஐஸ்லூப் சிஸ்டம் மற்றும் வெப்பச் சிதறலுக்கான 6,000 மிமீ சதுர வேப்பர் கூலிங் சேம்பர் ஆகியவைகளும் உள்ளன. இது வைல்ட்பூஸ்ட் ஆப்டிமைசேஷன் 3.0-ஐயும் ஆதரிக்கிறது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில்டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டமும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது (இந்தியாவில்) 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 7550mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் IP66 + IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடுகளை பூர்த்தி செய்வதாக கூறப்படுகிறது. இது ஒரு அலுமினிய மிடில் பிரேம் மற்றும் ஒரு கிளாஸ் பேனலை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-C போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக அளவீட்டில் 7.98மிமீ மற்றும் எடையில் 222 கிராம் உள்ளது.
போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 12GB ரேம் + 512GB ஆப்ஷன் ரூ.33,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் 2025 ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கும். போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சைபர் சில்வர் எடிஷன், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் பேண்டம் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








