Home
Mobile

இந்த விலைக்கு இப்படி ஒரு போன்-ஆ.. 7550mAh பேட்டரி உடன் POCO-வின் புது 5G மாடல்.. ஜூன் 24 அறிமுகம்!

கடந்த சில நாட்களாக "விரைவில் அறிமுகமாகும்" என்று டீஸ் செய்யப்பட்ட போக்கோவின் புதிய 7550mAh பேட்டரி ஸ்மார்ட்போனின் (POCO 7550mAh Battery Phone) இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்?

என்ன மாடல்? எப்போது அறிமுகம்? நாம் இங்கே பேசுவது போக்கோ எப்7 5ஜி (Poco F7 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தொடர்ச்சியான டீசர்களுக்கு பின்னர், ஒருவழியாக போக்கோ நிறுவனம் இந்திய சந்தைக்கான அதன் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. இது வருகிற ஜூன் 24 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

7550mAh பேட்டரி உடன்  POCO-வின் புது 5G மாடல்.. ஜூன் 24 அறிமுகம்!

இந்தியாவிற்கு வரும் ஒரே மாடல்! நினைவூட்டும் வண்ணம் போக்கோ நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் உலகளாவிய சந்தைக்கான போக்கோ எப்7 ப்ரோ (Poco F7 Pro) மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா (Poco F7 Ultra) மாடல்களை வெளியிட்டது. இந்த சீரீஸில், அடுத்த வாரம் போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனும் (உலகளவில்) இணைய உள்ளது. இருப்பினும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரே ஒரு எப் 7-சீரிஸ் மாடலாகவும் இது இருக்கும்

போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? பிளிப்கார்ட் (Flipkart) வழியாக கிடைக்கும் அதிகாரப்பூர்வ டீஸர்கள் வழியாக போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனில் 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7550mAh பேட்டரி இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

7550mAh பேட்டரி உடன்  POCO-வின் புது 5G மாடல்.. ஜூன் 24 அறிமுகம்!

கூடுதலாக, 22.5W வரையிலான ஸ்பீடில் மற்ற டிவைஸ்களை சார்ஜ் செய்ய இதை ஒரு பவர் பேங்காக பயன்படுத்தலாம் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டீஸர் போட்டோவில் போக்கோ எப்7 மாடலின் ஸ்பெஷல் கலர் வேரியண்ட்டை காண முடிகிறது. மேலும் இது பிளாக் மற்றும் ஒயிட் கலர்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.34,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் போக்கோ எப்6 இந்தியாவில் ரூ.29,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2025 ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகமான ரெட்மி டர்போ 4 ப்ரோ (Redmi Turbo 4 Pro) மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில், போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.83-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் .

போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் சிப்செட்டை பொறுத்தவரை இது 16GB வரை ரேம் மற்றும் 512GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Qualcomm Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

கேமராவைப் பொறுத்தவரை, இது OIS உடன் 50எம்பி சோனி IMX766 ப்ரைமரி சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், இது 20எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்லாம்

பேட்டரியை பொறுத்தவரை (முன்னரே குறிப்பிட்டபடி) இந்த ஸ்மார்ட்போன் 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,550mAh பேட்டரியை பேக் செய்யும். மற்ற விவரங்களை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 கஸ்டம் யுஐ, ஐபி68 / ஐபி69 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு, ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
POCO F7 5G India Launch Date June 24 Announced 7550mAh Battery Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X