Home
Mobile

செய்கைனா இதுதான்.. வெறும் ரூ.22000 பட்ஜெட்ல SONY கேமரா.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

போகோ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கேமரா பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் சோனி சென்சாருடன் மெயின் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் சென்சாருடன் செல்பீ கேமரா கொண்ட போகோ எப்6 (POCO F6) ஆர்டருக்கு கிடைக்கிறது. கேமரா மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, டால்பி அட்மோஸ் ஆடியோ, கொரில்லா கிளாஸ் விக்டஸ் டிஸ்பிளே, சியோமி ஹைபர்ஓஎஸ் போன்ற பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த போகோவின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களுக்கு செல்வோம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) போகோ எப்6 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது, ரூ.23,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆனால், இந்த மாடல் ரூ.29,999 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, ரூ.6000 விலை குறைப்பில் இப்போது ஆர்டருக்கு வந்துள்ளது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

செய்கைனா இதுதான்.. வெறும் ரூ.22000 பட்ஜெட்ல SONY கேமரா.. 90W சார்ஜிங்!

போகோ எப்6 அம்சங்கள் (POCO F6 Specifications): இந்த போகோ மாடல் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ் 822 (Sony IMX 822) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilizyion) சப்போர்ட் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்சுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) பேக் செய்யப்பட்டுள்ளது. கிளாரிட்டி அவுட்புட் கொடுக்க ராவ் டொமைன் அல்கோரிதம் (RAW Domain Algorithm), ஹைபர்கலர் இமேஜின் கொடுக்க பி3 கலர் காமட் (P3 Colour Gamut), லைட்னிங் போட்டோ அவுட்புட் கொடுக்க போகோ இமேஜ் என்ஜின் (POCO Image Engine) வருகிறது.

வீடியோவில் சப்ஜெக்ட் டிராக்கிங் செய்து கொள்ள மோஷன் டிராக்கிங் போகஸ் 2.0 (Motion Tracking Focus 2.0) சப்போர்ட் வருகிறது. ஓம்னிவிஷன் ஓவி20பி (OmniVision OV20B) சென்சார் கொண்ட 20 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, கேமராவில் பட்ஜெட்டை விட கூடுதலாக பல்வேறு பீச்சர்களை எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது.

சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்கும். டிஸ்பிளே பீச்சர்கள் கேமிங் பிரியர்களுக்கு ஏற்றபடி இருக்கிறது. பிளாட் டிசைனில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.

இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட அமோலெட் (AMOLED) பேனலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்டிருக்கிறது. 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த போகோவில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.23,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, ரூ.22,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco F6 With 50MP Camera 8GB RAM Sale Under Rs 23000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X