மார்க்கெட்டே மிரள போகுது.. Sony கேமரா.. 90W சார்ஜிங்.. 512GB மெமரி.. புதிய போக்கோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எப்6 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது போக்கோ எப்6 போன் ஆனது BIS தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் இந்தியாவில் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக போக்கோ எப்6 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது புநநமடிநெஉா தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த போனின் மாடல் நம்பர் 24069PC21G ஆகும். இப்போது ஆன்லைனில் வெளியான போக்கோ எப்6 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ எப்6 அம்சங்கள் (POCO F6 specifications): 6.67-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் 2500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (2500 nits of peak brightness), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த புதிய போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாகும். எனவே இந்த போனில் கேமிங் ஆப்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்920 பிரைமரி கேமரா + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 355 அல்ட்ரா வைடு கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ எப்6 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது போக்கோ எப்6 ஸ்மார்ட்போன். அதேபோல் HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போக்கோ போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








