Home
Mobile

வாரித் தூக்கலாம்.. பட்ஜெட்ல FUSION கேமரா.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

லைட் ப்யூஷன் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, அட்ரினோ கிராபிக்ஸ், 12 ஜிபி ரேம், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் போக்கோ எப்6 ப்ரோ (POCO F6 Pro) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

போக்கோ எப்6 ப்ரோ அம்சங்கள் (POCO F6 Pro Specifications): இந்த போக்கோவில் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. 6.67 இன்ச் (3200 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொண்டிருக்கிறது.

பட்ஜெட்ல FUSION கேமரா.. 12GB ரேம்.. 120W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே!

அதுமட்டுமல்லாமல், 3840Hz PWM டிம்மிங் பிரிகொன்சி, 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ் ( HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. சியோமியின் பீரிமியமான ஹைபர்ஓஎஸ் (HyperOS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm Mobile) சிப்செட் வருகிறது.

கேமிங் பிரியர்களுக்கென பக்காவான அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடையாது.

ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டும் வருகிறது. டிஸ்பிளேவை போலவே கேமரா பீச்சர்களும் மிரளவிடும்படி இருக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் லைட் ப்யூஷன் 800 (Light Fusion 800) சென்சார் இருக்கிறது.

ஓஐஎஸ் (OIS), ஈஐஎஸ் (EIS) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த போக்கோ எப்6 ப்ரோவில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டிரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்டிருக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட மிரளவிடும் பேட்டரி சிஸ்டம் வருகிறது. இந்த போக்கோவில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது.

வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), டூயல் ஜிபிஎஸ் (Dual GPS), கியூஇசட்எஸ்எஸ் (QZSS) மற்றும் என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன. இந்த போக்கோ போனானது, முதலில் தாய்லாந்து நாட்டில் வெளியாகிறது. இப்போது, என்பிடிசி (NBTC) சர்டிபிகேஷனில் இடம்பெற்றுள்ளது.

இந்த போக்கோ எப்6 ப்ரோ மாடலானது, சீனாவில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரெட்மி கே70 (Redmi K70) போனின் ரீபிராண்ட் வெர்ஷனாகும். ஆகவே, இந்தியாவிலும் இந்த வெர்ஷனிலேயே வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அடுத்த சில மாதங்களில் தாய்லாந்து நாட்டிலும், அதன்பிறகு மற்ற நாடுகளிலும் வெளியாகிறது. ரூ.30,000 பட்ஜெட்டில் விலை இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO F6 Pro With Snapdragon 8 Gen 2, OLED Display Launch Soon Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X