மே 23 உறுதி.. 120W சார்ஜிங்.. சோனி கேமரா.. இந்தியாவுக்கு வரும் POCO போன்கள்.. எந்த மாடல்?
இந்தியாவில் போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எப்6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது போக்கோ எப்6 மற்றும் போக்கோ எப்6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த போன்களின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
போக்கோ எப்6 அம்சங்கள் (poco f6 specifications): 6.67-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்6 போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400 நிட்ஸ் ப்ரைட்னஸ்,2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2160Hz PWM dimming),டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 8s Gen 3) சிப்செட் வசதியுடன் இந்த போக்கோ எப்6 போன் வெளிவரும் மேலும் இதில் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. அதோடு HyperOS சார்ந்த ஆண்டராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி சோனி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்6 போன். மேலும் 20எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

போக்கோ எப்6 ப்ரோ அம்சங்கள் (poco f6 pro specifications): 6.67-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எப்6 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 3840ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (3840Hz PWM dimming), டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ( Snapdragon 8 Gen 2) சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்த போக்கோ எப்6 ப்ரோ ஸ்மார்ட்போன். HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போக்கோ போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்6 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 120W சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
போக்கோ எப்6 மற்றும் போக்கோ எப்6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரும் மே 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போக்கோ எப்6 சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








