Home
Mobile

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 90W சார்ஜிங்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

டெட்பூல் & வோல்வரின் (Deadpool & Wolverine) ஹாலிவுட் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு போக்கோ இந்தியா நிறுவனம், போக்கோ எப்6 டெட்பூல் எடிஷன் (POCO F6 Deadpool Edition) மாடலை களமிறக்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 90W சார்ஜிங், 5000mAh பேட்டரி, 12ஜிபி ரேம் போன்ற பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த போக்கோ எப்6 டெட்பூல் எடிஷனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போக்கோ எப்6 டெட்பூல் எடிஷன் அம்சங்கள் (POCO F6 Deadpool Edition Specifications): இந்த போக்கோவில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 90W சார்ஜிங்.. 12GB ரேம் போன்!

மேலும், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் வருகிறது. பிளாட் டிசைன் கொண்டிருப்பதால், கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும்படி இருக்கிறது.

இந்த போக்கோ எப்6 போனில் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கேமராவில் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி சென்சார்கள் வருகின்றன. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது. இந்த போக்கோ எப்6 டெட்பூல் எடிஷனில் ஓம்னிவிஷன் ஓவி0பி (OmniVision OV20B) சென்சார் கொண்ட 20 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

பக்கா பேக்கப் கொடுக்கும் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட்டுக்காக 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது.

7.8 மிமீ ஸ்லிம் டிசைனில் 179 கிராம் எடை வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் உள்ளது. இந்த போக்கோ எப்6 டெட்பூல் எடிஷனின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். வெறும் 3000 யூனிட்கள் மட்டுமே ஆர்டருக்கு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO F6 Deadpool Limited Edition Launched Sale From August 7 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X